அருள்மிகு முருகுநாதேஸ்வரர் திருக்கோவில் (திருமுருகன்பூண்டி)

God Name : முருகுநாதேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

சூர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட தோஷங்களை விலக்கிக் கொள்ள, முருகப் பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். இதனால் இவ்விறைவனுக்கு முருகுநாதேஸ்வரர் என்ற பெயரும், இவ்வூருக்கு திருமுருகன்பூண்டி என்ற பெயரும் வந்தது. முருகன் சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பாக கோயிலுக்கு வெளியே தனது வேலை தரையில் ஊன்றி, அருகே மயிலையும் நிறுத்தி வைத்தார் எனக் கூறப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு முருகன் விலக்கி வைத்த பிரம்மஹத்தி தோஷம் தற்போது கோயிலுக்கு வெளியே உள்ள வேம்படி முருகன் சந்நிதியருகே சதுரக் கல்லாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சேரமான் பெருமானிடமிருந்து பொருட்களைப் பெற்றுக் கொண்டு இவ்வூர் வழியாக சுந்தரமூர்த்தி நாயனார் வந்து கொண்டிருந்தபோது, அவரது பொருட்களை வழிப்பறி செய்தனர். தாம் அல்லாது பிறரிடம் சுந்தரர் பொருட்களைப் பெற்று செல்வதையும், தம்மை பாடாது போவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத இறைவன், பூத கணங்களை அனுப்பி வழிப்பறி செய்ய செய்தார். பூத கணங்கள் வேடுவர் வேடம் புனைந்து சென்று வழிப்பறிகளை நடத்தினர் எனத் தல வரலாறு. பொருட்களைப் பறிகொடுத்த சுந்தரர், இவ்வாலயத்திற்குள் வந்து, 'கொடுமையான செயல்கள் புரிந்து களவாடும் வேடுவர்கள் இருக்கும் இவ்வூரில் நீர் ஏன் இருக்கின்றீர்?' எனும் பொருள்பட பதிகங்களை பாடினார். 'அடியார்களின் இடர்களைக் களையும் பொறுப்பிலுள்ள நீர், இச்செயலைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதேன்?' எனவும் வினவினார். பூத கணங்கள் பறித்த பொருட்களைத் திருப்பித் தரச் சொல்லி, வாசலில் இருப்பதைக் கண்டு சுந்தரரும் மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் எனத் தல வரலாறு. வழிப்பறி நடந்த சமயம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார், சுந்தரருக்கு ஆதரவாக கூக்கூவெனக் கூவி ஊர் மக்களை அழைத்தார். கூக்குரலிட்டுக் களவை வெளிப்படுத்த முயற்சி செய்த பிள்ளையாரைக் கோயில் வாசலிலேயே மரத்தடியில் இருக்குமாறு பணித்தார் இறைவன்.
மூலவர்: முருகுநாதேஸ்வரர், அம்பாள்: முயங்குபூண்முலையம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் முருகுநாதேஸ்வரர். சுயம்பு வடிவம். மேற்கு பார்த்த சந்நிதி. மேற்கு பார்த்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்கினால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அம்பாள் முயங்குபூண்முலையம்மை உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். ஆலிங்கபூஷண ஸ்தனாம்பிகை என வடமொழியில் அழைப்பார்கள். சுவாமி - அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். சிறப்பு மூர்த்தமாக ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். முன்புறமாக ஐந்து முகங்களும், பின்புறமாக ஒரு முகமும் கொண்ட அழகான திருவுருவம். அழகிய மயில் கூடவே இருக்கின்றது. கருவறைக்குள் முருகன் வழிபட்ட சிவலிங்கமும் இருக்கின்றது. பதினாறுகால் மண்டபத்தில் விநாயகரின் திருவுருவம் காணலாம். இரண்டு வித முகபாவங்களை சித்தரிக்கும் சந்திரரின் சிற்பம் மிகவும் அழகாக இருக்கிறது. பொருளைப் பறிகொடுத்துத் துயரப்படும் முகம் ஒன்றும், பொருள் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம் ஒன்றும் காணக் கிடைக்காத அற்புதம். பிரகார வலச்சுற்றில் நிருதி விநாயகர், ஷண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். கூக்கூ பிள்ளையாரையும் திருமாலையும் தரிசிக்கலாம். அஷ்ட புஜங்க பைரவராக எழுந்தருளியுள்ளார் காலபைரவர். தமருகம், வஜ்ரம், கட்கம், சூலம், நாகம், முசலம், பிக்ஷா பாத்திரம் ஏந்திய கரங்களுடனும், அக்னி சிகையுடனும் காட்சி தரும் அழகான திருவுருவம். துவஜஸ்தம்பத்தை அடுத்து சிவபெருமானின் மூன்று கோலங்களைக் காணலாம். பஞ்ச தாண்டவத் தலங்களுள் பிரம்ம தாண்டவத் தலம் எனப் போற்றப்படுகிறது. தேவாரத் திருத்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.