அருள்மிகு சிவசலாபதி திருக்கோவில் (சிவன்மலை)

God Name : சிவசலாபதி என்றழைக்கப்படும் சுப்ரமணியர்

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

ஸ்தல வரலாறு சீயகங்கன் என்பவன் ஆட்சி புரிந்த ஊர். கங்கர்கள் ஆண்ட பகுதி என்பதால் காங்கேயம் எனப்பட்டது. காங்கேயன் என்றழைக்கப்பட்ட முருகன் கோவில் கொண்ட ஊர் என்பதால் காங்கேயம் எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர். நவவீரர்கள் எழுந்தருளியிருப்பதால் வீரமாபுரம் அல்லது வீரை என்றழைக்கப்பட்டது. முருகனிடம் உபதேசம் பெற்ற சிவவாக்யர் இங்கு கோவில் அமைத்ததால் சிவன்மலை என்ற பெயரைக் கொண்டது. சிவன்மலை சூழ் பகுதிகளில் கிடைக்கப் பெற்ற பலவித வண்ணக் கற்களை ரோமாபுரி நாட்டுப் பெண்கள் விரும்பி அணிந்ததாகக் குறிப்பொன்று கூறுகிறது. ஆலம்பாடி காட்டம்மை, பாப்பினி அங்காள பரமேஸ்வரி, காங்கேய ஆயி, வலுப்புரமன், தங்கம்மன், அத்தனூரம்மன், கரிய காளியம்மன், செல்வநாயகி ஆகிய அஷ்ட துர்க்கைகள் சிவன் மலையின் எட்டு திக்குகளிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிவன்மலைக்கு அருகேயுள்ள பட்டாலியூரில், வேடுவர்களின் கண்காணிப்பிலிருந்த வள்ளியை முருகப்பெருமான் சிறை எடுத்து வந்து இம்மலையில் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வருகையில் சிறு துண்டு ஒன்று இங்கு விழுந்து சிவன்மலையானதாகக் கூறப்படுகிறது. மலையடிவாரத்தில் கிரிவலம் வருகையில் சிவாலயத்தைத் தரிசிக்கலாம். ஆஞ்சநேயர் சிவனாரை வழிபட்ட ஸ்தலம் என்பர். ஆஞ்சநேயரின் திருவுருவத்தைச் சேவிக்கலாம்.
சிறிய குன்றாகக் காட்சி தரும் சிவன்மலைக்கு ஏறிச் செல்ல 496 படிக்கட்டுகள் இருக்கின்றன. சத்யப்படி அல்லது புராணப்படி என்றழைக்கப்படும் பதினெட்டாம் படியில் வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. வழியில் இளைப்பாறும் மண்டபங்களும் உண்டு. இரண்டு கி.மீ. நீளத்திற்கு மலைப்பாதையும் உண்டு. மலைப்பாதை நுழைவு வாசலில் அமர்ந்து தரிசனம் தரும் பாத விநாயகரை வணங்கி ஆசி பெற்று மலை ஏறத் தொடங்குகின்றனர். சற்றுத் தொலைவில் சந்நிதி கொண்டுள்ள இடும்பனை தரிசித்துவிட்டு பின்னர் மலை உச்சிக்குச் செல்கின்றனர். தங்கத் தகடுகள் வேய்ந்த கலசத்துடன் கூடிய விமானத்தைத் தாங்கிய மூலஸ்தானத்தில் மூலவராக சிவசலாபதி என்றழைக்கப்படும் சுப்ரமணியர் எழுந்தருளி அருள் புரிகின்றார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. இவருக்கு கந்தசாமி, காங்கேயன், குஹன், குருசாமி, மரகத மயூரான், முத்தையன், வடிவேலன், வள்ளி மணாளன், கல்யாண சுப்ரமணியர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அருகே வள்ளியம்மை காட்சி தருகிறார். வேறொரு சந்நிதியில் வள்ளி - தெய்வானை தேவியர்கள் இடம்பெற்றுள்ளனர். மயிலின் தலை இடப்பாகம் நோக்கி உள்ளது. இங்குள்ளது தேவமயில் என்பார்கள். அதாவது மயிலின் தலை வடக்கே வைத்து தோகை தெற்கே இருந்தால் தேவமயில் எனவும், தெற்கே தலை வைத்து தோகையை வடக்கே வைத்தால் அசுர மயில் எனவும் கூறுவார்கள். பிரகார வலச்சுற்றில் ஞானாம்பிகை சகித கைலாசநாதர் மற்றும் நஞ்சுண்டேஸ்வரர், அன்னை பர்வதவர்த்தினி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். தேவசேனாதிபதியின் படை வீரர்களான நவ வீரர்களை இங்கு தரிசிக்கலாம். ஜ்வரஹரேஸ்வரரும் சந்நிதி கொண்டுள்ளார். ஏராளமான செப்புப் படிமங்கள் இருக்கின்றன. சூரியனைப் பார்த்தபடி நவகிரகங்கள் காணப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.