அருள்மிகு வேலாயுதஸ்வாமி திருக்கோவில் (செஞ்சேரி)
God Name : மூலவர்: மந்திராசல வேலாயுத மூர்த்தி் உற்சவர்: முத்துக்குமரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
ஸ்தல வரலாறு: சூரபத்மனை வென்று தேவர்களை காக்கும் பொருட்டு, தேவ சேனைகளுக்கு தலைமை தாங்கி புறப்பட்டார் குமரக்கடவுள். சக்தியின் அம்சம் - ருத்ரர்களின் அம்சம் என பலவித ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டு கிளம்பினார் குமரன். வீரபாகுவும், நவவீரர்களும் துணை வந்தனர். அன்னையின் அறிவுரைப்படி, சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற இங்குள்ள சிவகிரியில் தவம் இயற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பிரத்யட்சமாகி, மாயையின் பிடியிலிருந்து விடுவிக்கும் மந்திர உபதேசங்களை செய்தார். இதனால் இம்மலையை மந்திரமலை என அழைத்தனர். இந்த மலை இருந்த பகுதி தென்சேரிமலை எனப் பெயருற்று நாளடைவில் மருவி செஞ்சேரிமலை என்றாயிற்று. சூர சம்ஹாரம் முடித்த பின்னர் முருகப் பெருமான் தெய்வயானையை மணம் முடித்து, பின்னர் இந்த மலையில் வந்து கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மலைப்பாளையம் எனும் கிராமத்தில் மலையடிவாரம் தொடங்குகிறது. 250 படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும். படியேறும் முன் சந்தன விநாயகரை வணங்கி ஆசி பெற்று, வழியில் இடும்பனை தரிசித்து பின்னர் மலையேறுவதை தொடர்கின்றனர். மூலஸ்தானத்தில் மூலவராக மந்திராசல வேலாயுத மூர்த்தி ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். நான்கடி உயரம் கொண்ட அழகான திருமேனி. சேவற்கொடிக்கு பதிலாக செஞ்சேவலையே பிடித்துக் கொண்டிருப்பது வித்தியாசமான காட்சி. மயில் வாகனம் வடக்கு நோக்கி உள்ளது. உற்சவ மூர்த்தியான முத்துக்குமரர் பேரழகுடன் காணப்படுகிறார். வள்ளி - தெய்வயானை உடனாய முத்துக்குமரர் பத்மபீடத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். ஆறுமுகப் பெருமானின் கரங்களில் பூ வைத்து பூக்கேட்டல் வேண்டுதலை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளனர். வலக்கரத்து மலர் வீழ்ந்தால் சுபம் எனவும், தாமதமாக வீழ்ந்தால் காரியத்தடை எனவும், இடது கரத்து பூ வீழ்ந்தால் அசுபம் எனவும் கணக்கிடுவார்களாம். பெரியநாயகி அம்பாள் சகிதம், சிவலிங்க வடிவினராக கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். விநாயகப் பெருமான், சிவகாமி சமேத நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வலது கையில் லிங்கத்தை ஏந்தியபடி காட்சி தரும் திருமாலை சேவிக்கலாம். அநாம விருட்சம் (பெயரில்லா மரம்), புலிப்பார் தட்சிணக்கல், மகரசுனை, போகர் தவமியற்றிய குகை ஆகியன காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.