அருள்மிகு நீலகண்டியம்மன் திருக்கோவில் (பொங்கலூர்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

ஸ்தல வரலாறு: கார்த்தவீர்யாஜுனனால் கொல்லப்பட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி தீப்பாய்ந்தாள். இந்திரன் வருணனைக் கொண்டு மழை பெய்வித்தமையால், தீ அணைந்து தீக்காயங்களுடன் உயிர் தப்பிய ரேணுகா ஒரு சேரிக்குள் சென்று தங்கியிருந்தாள். வேப்ப இலையை உடுத்திக் கொண்டு, பச்சரிசி, வெல்லம், இளநீர், பானகம் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தாள். ஆறுதலடையாததால் ரேணுகா தேவி மீண்டும் தன் உயிரைத் துறக்க முற்பட்டபோது, சிவபெருமான் தோன்றி, அவளைப் பூமியில் தங்கி, பக்தர்களுக்கு அருள் புரியுமாறு பணித்தார். அந்த ரேணுகா தேவியின் அம்சமே இந்த நீலகண்டியம்மன் என்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. கருவண்ணராயன் - பொம்மியம்மன் கோவில், மதுரைவீரன் கோவில், விநாயகர் கோவில், கருப்பண்ணசாமி கோவில், காரணப் பெருமாள் கோவில், பசுபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் உள்ளன.
முன் மண்டபத்தில் ஓர் ஆண் பூதமும், ஓர் பெண் பூதமும் காவலுக்கு நிற்கின்றன. மகாமண்டபத்தில் அமர்ந்த கோலத்தில் நீலன்-நீலீஸ்வரி பூதங்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தின் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைப்பாடுகளுடையவை. அர்த்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகரிடம் ஆசி பெற்று, பிரதான கருவறைக்குச் சென்று அங்கு மூலவராக அமர்ந்திருக்கும் நீலகண்டியம்மனை தரிசிக்கலாம். மிகுந்த வரப்பிரசாதியாகக் கோவில் கொண்டிருக்கும் அம்மன் சந்தனக் காப்பில் ஜொலிப்பாள். உற்சவ மூர்த்தியின் எழில் வடிவம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. சித்ரா பௌர்ணமியை ஒட்டி விசேஷ கொண்டாட்டங்கள் நடைபெறும். காப்பு கட்டுதல், பொங்கலிடுதல், மாவிளக்கு போன்றவைகளை முடித்துக் கொண்டு, அடுத்த நாள் மஞ்சள் நீராட்டு, சுவாமி புறப்பாடு ஆகியன நடைபெறும். ஆடி மாதத்தில் லட்சார்ச்சனை, பங்குனி உத்திரப் பெருவிழா ஆகியன சிறப்புற நடத்துகின்றனர். நீலகண்டியம்மனின் உற்சவ மூர்த்தி அலங்காரங்களுடன் சப்பரத்தில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி என்பர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.