அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோவில் (அய்யன்பாளையம்)

God Name : வாழைத்தோட்டத்து அய்யன்

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

செங்காளியப்பன் என்பவரின் மகனான சின்னையன் என்பவன் ஆடு - மாடுகளை மேய்த்து வந்தான். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தி மிகுந்தவனாகக் காணப்பட்டான். கற்களை நட்டு, அதையே சிவலிங்கமாகப் பாவித்து பக்தி சிரத்தையோடு வழிபடுவான். இவனுடைய உண்மையான பக்தியைக் கண்டு வியந்த துறவி ஒருவர், இவனுக்கு பஞ்சாட்சர மந்திரம், சர்வ விஷஹர மந்திரம் ஆகிய மந்திரங்களை உபதேசித்தார். கற்றுக்கொண்ட மந்திரங்களைக் கொண்டு, நாடி வருபவர்களின் விஷக்கடி உபாதைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் சேவையைச் செய்து வந்தான் சின்னையன். சின்னையன் எனப்படும் அய்யனை ஒரு நாள், அவன் பிரியமாக வளர்த்து வந்த காளை எதிர்கொண்டு பாய்ந்து கூரிய கொம்புகளால் குத்தித் தூக்கியெறிந்தது. உமா - மகேஸ்வரனாகக் காட்சி தந்து சின்னையனை அழைத்துக் கொண்டார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சின்னையனின் மகன் ராசியண்ணாவின் கனவில் வந்து இறைவன் கூறியபடி, நொய்யலாற்றுக்குள் இறங்கித் தேடியதில் கிடைத்த சிவலிங்கத்தை எடுத்து வந்து கிளுவை மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
பிரதான கருவறையின் மூலவர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். சுயம்பு லிங்க வடிவினர். எதிரே நந்தி காணப்படுகிறது. கருவறையிலுள்ள விருட்சத்தின் கீழ் வெண்ணிற நாகம் ஒன்று படமெடுத்து ஆடும் காட்சியைப் பலர் கண்டுள்ளனர். வெட்டிவேர் கொண்டு போடப்பட்ட பந்தல் கருவறையை அலங்கரிக்கிறது. வெளிப் பிரகாரத்தில் சிவகாமி உடனாய நடராஜர், வள்ளி - தெய்வயானை சமேத முருகன், விநாயகப் பெருமான் ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம். மரத்தடியில் நாக பிரதிஷ்டைகளுடன் ஸ்ரீ ராஹு - ஸ்ரீ கேது திருவுருவங்களையும் தரிசிக்கலாம். ஆலயத்தின் முன்பாக பிரம்மாண்டமான குதிரைகள் இரண்டு நிற்கின்றன. மூங்கில்களை நெருக்கமாக வரிசைப்பட அடுக்கி கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்ட மேற்கூரையும், கடப்பா கல் தரையும் கொண்ட பிரதான கருவறையின் நடுவே நெடிதுயர்ந்து வளர்ந்த கிளுவை மரத்தைக் காணலாம். கிளுவை மரத்தின் கீழ் நான்கடி ஆழம் கொண்ட பெரிய புற்று ஒன்றும் உள்ளது. மரத்தின் கிளைகளில் நேர்த்திக் கடனாகத் தொங்க விடப்பட்ட சர விளக்குகளையும், வெண்கல மணிகளையும் பார்க்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.