அருள்மிகு காடு ஹனுமந்தராயர் திருக்கோவில் (தாராபுரம்)
God Name : காடு ஹனுமந்தராய சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
பிரஹலாதனின் அவதாரமான வியாசராயர் நிறுவிய 732 ஆஞ்சநேய மூர்த்திகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
மீலன் எனும் ஆங்கிலேய துரை ராஜபிளவை நோய் கொண்டு கஷ்டப்பட்டார். இத்தலத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேர்த்திருவிழா, நரசிம்ம ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி, ராகவேந்திரர் ஆராதனை, வைகுண்ட ஏகாதேசி, மத்வ ஜெயந்தி, சீதாராம கல்யாணம் ஆகியனவற்றை சிறப்பாக கொண்டாடுகின்றனர். விடியற்காலையில் ஹரி வாயு ஸ்துதியுடன் ஹனுமன் ஜெயந்தி விழாவை தொடங்கி சிறப்பாக கொண்டாடுகின்றனர். மாத்வ சம்ப்ரதாயப்படி பூஜா முறைகள் இருக்கின்றன.
பிரதான கருவறையில் மூலவராக காடு ஹனுமந்தராய சுவாமி எழுந்தருளியுள்ளார். ஏழடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட பலகை சிற்பமாக காட்சி தருகின்றார். வடகிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார்.
அழகிய முகத்தில் மீசையுடனும், கழுத்தில் சாளக்கிராம மாலைகள் அணிந்தும், இடுப்பில் மணி சலங்கையுடன் கூடிய பிச்சுவா கத்தியும் கொண்டு, சங்கு-சக்கரதாரியாக காட்சி தருகின்றார். மூன்று மணிகளுடன் கூடிய வால், தலையை சுற்றி கீழே இறங்குவது போல் உள்ளது.
ஸ்ரீ ராமர், லட்சுமி நரசிம்மர், ராகவேந்திரர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.