அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் (திருமூர்த்தி மலை)
God Name : அமணலிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
அனுசுயா தேவி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி தனது பதிவிரதா தன்மையை உலகுக்கு உணர்த்திய இடம். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று தேவியர்களும் தத்தம் கணவர்களை மீண்டும் பெற்ற இடமே திருமூர்த்தி மலை என ஸ்தல வரலாறு கூறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகப் பரவியுள்ள ஆனைமலையின் ஒரு பகுதியே திருமூர்த்தி மலை எனப்படுகிறது. மலைச்சாரலில் உள்ள ஒரு பெரிய உருண்டை பாறையில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் அழகிய சிவலிங்க வடிவினர். நெடுங்காலமாக மலையருவியினால் தீர்த்த அபிஷேகம் செய்யப்படும் சுயம்பு லிங்கம். 'அமணம்' என்றால் 'அழகிய' என்று பொருள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பஞ்சலோக திருமேனிகளுக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சுந்தர கணபதி, பாலசுப்ரமண்யர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். வேணுகோபாலன், நரசிம்மர், காளி, ஊர்த்துவ தாண்டவர் ஆகியோரின் சிற்பங்களை த்வஜஸ்தம்பத்தில் காணலாம். 30 அடி உயரமுள்ள ஜோதிக்கம்பத்தில் கார்த்திகை ஜோதி ஏற்றி கொண்டாடப்படுகிறது. குன்றின் கீழே சப்த கன்னியர்கள் காணப்படுகிறார்கள். மலையடிவாரத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் பஞ்ச லிங்கங்களைத் தரிசிக்கலாம். பெரிய வடிவம் கொண்டு காட்சி தரும் அழகிய பஞ்சலிங்கங்கள் பார்க்கப் பரவசமூட்டுபவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.