அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோவில் (கொழுமம்)
God Name : சோழீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
எல்லா நாட்டு வணிகர்களும் இங்கு கூடியதால் குழுமூர் என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி கொழுமம் என்றானதாகக் கூறப்படுகிறது. கொடை வள்ளல் குமணன் ஆண்ட குமணன் நகரையே கொழுமம் என அழைப்பதாகக் கூறுவோரும் உண்டு. வீரசோழ மன்னன் இவ்வாலயத்தைப் புதுப்பித்துக் குடமுழுக்கு நடத்தி, மூலவருக்கு சோழீஸ்வரர் எனப் பெயரிட்டு வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோழீஸ்வரர். இவருக்கு தாண்டேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பிரகார வலச்சுற்றில் சுந்தர விநாயகர், அக்னீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். ஐந்தரை அடி உயர அழகிய திருமேனி கொண்டு ஆனந்ததாண்டவ கோலத்தில் காட்சி தரும் நடராஜப் பெருமானின் அழகிய வடிவம் கண்களை விட்டு அகலாது. சிவகாமி அன்னையோடு அலங்கார பூஷிதராகக் காட்சி தருகிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.