அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் (உடுமலைப்பேட்டை)
God Name : காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
ஊரை சுற்றிலும் மலை அரணாகவும் சக்கர வடிவமாகவும் அமைந்திருப்பதால் முன்நாளில் சக்கரபுரி எனப் பெயர் கொண்டிருந்தது. உடும்புகள் மிகுந்து காணப்பட்டதால் உடுமலைப்பேட்டை எனப் பெயர் பெற்றதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். கற்பூர ஆரத்தியில் பிரகாசிக்கும் தேஜோமய லிங்கம். அன்னை விசாலாட்சி உடன் எழுந்தருளி அருள்புரிகிறாள். பிரகார வலச்சுற்றில் சௌரிராஜப் பெருமாள், கண்ணபுர நாயகித் தாயார், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், துர்கா தேவி, நடராஜர், பைரவர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கோஷ்ட மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றனர். மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பிரசன்ன விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. கம்பீரமாக தரிசனம் தருகிறார். மூஷிக வாகனமும் பெரியதாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள அரசமரத்தடியில் ராஜகம்பீரமாக அமர்ந்து அருள்புரிகின்ற ஆதி விநாயகர், திப்புசுல்தானால் வழிபடப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. வன்னி மரத்தடியில் பிரம்மா காட்சி தருகிறார். முன்மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசி சக்கரங்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.