அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் (கொடைக்கானல்)

God Name : குறிஞ்சி ஆண்டவர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி என்று அழைப்பார்கள். இங்கு குறிஞ்சி எனும் அரிய வகை மலர்கள் பூத்துக் குலுங்கும். ஸ்தல விருட்சமான குறிஞ்சி செடி ஐந்தடி உயரம் வளர்ந்து புதராக மண்டிக் கிடக்கும். இதன் அரிய வகை மலர்கள் விசேஷமானவை. ஆண்டிற்கொரு முறை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடியவைகள் இருந்தாலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் சிறப்பானது. 1994, 2006ல் பூத்தது. 2018ல் எதிர்பார்க்கலாம். குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்கும் பருவத்தில், அந்த மலர்களைக் கொண்டே முருகனுக்கு அலங்காரம் செய்வார்கள். ஐரோப்பாவைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண்மணி ஒருவர் இங்கு வந்து, இந்து மதத்திற்கு மாறி, லீலாவதி எனப் பெயர் வைத்துக் கொண்டு, ராமநாதன் என்பவரை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்தினார். இவ்வூரில் இருந்தபடியே பழநி முருகனை தரிசித்து வந்தார். மேகமூட்ட காலங்களில் பழநிமலை சரிவரத் தெரியாததால், தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். 1936ஆம் ஆண்டு கொடைக்கானலிலேயே முருகன் கோவிலைக் கட்டி வழிபட ஆரம்பித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள குறிஞ்சி ஆண்டவரின் அழகை வர்ணிக்க இயலாது. மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும் பேரழகு கொண்டவர். சிரித்த முகம் - சின்னக் குழந்தை வடிவம். தனி சந்நிதியில் பெருமாளையும் எதிரே முழங்காலிட்டமர்ந்த கருடனையும் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.