அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் (பழநி)
God Name : பழநி ஆண்டவர் எனப்படும் தண்டாயுதபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
சிவபெருமானை தரிசிக்க கயிலாயம் சென்ற நாரத முனிவர், தனக்கு கிடைத்த அபூர்வமான மாங்கனி ஒன்றை சிவபெருமானிடம் தந்தார். அந்த பழம் தனக்கே வேண்டும் என விநாயகனும், முருகனும் கோரிக்கை வைத்தனர். உலகை முதலில் சுற்றி வருபவருக்கே இந்தப் பழம் தரப்படும் என்கிறார் மகேசன். உடனே முருகன் மயில் மீதேறி உலகை சுற்றி வரப் புறப்பட்டார். அம்மையப்பரே உலகம் என்பதால் அம்மையப்பரை சுற்றி வந்து விநாயகர் அந்த பழத்தைப் பெற்றுக் கொண்டார். உலகை சுற்றிவிட்டு திரும்ப வந்த முருகன், விநாயகர் பழத்தை வைத்துக் கொண்டிருப்பதால் தனக்கு தரப்படமாட்டாது என தெரிந்து கொண்டு கோபமுற்று, ஆண்டிக் கோலம் பூண்டு, இந்த மலை மீது வந்து நின்று கொண்டார். பழமே நீ! உனக்கு ஒரு பழம் வேண்டுமா? என பெற்றோர்கள் சமாதானம் கூறியும், சினம் தணியாது இங்கு வந்து நின்றுகொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பழம் நீ என்பதே பழநி என்று ஊரின் பெயராக அமைந்தது. சித்ரா பௌர்ணமியன்று வெள்ளித்தேர் பவனி நடைபெறும். வைகாசி விசாக விழா 10 நாட்களும் முத்துக்குமாரசுவாமி - வள்ளி - தெய்வயானை திருவுருவங்களை நறுமண மலர்களால் மாலை தொடுத்து காலையும் மாலையும் அலங்கரிப்பார்கள். விழாவின் 6ஆம் நாளன்று திருக்கல்யாணம், 7ஆம் நாள் திருத்தேர் நடைபெறும். ஆடி மாதத்தில் ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற தினங்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி - சூர சம்ஹாரம், கார்த்திகை விழா 10 நாட்கள், தைப்பூச விழா 10 நாட்கள், பங்குனி உத்திர விழா 10 நாட்கள் என ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். தைப்பூசத்தின் 6ஆம் நாள், பங்குனி உத்திரத்தின் 6ஆம் நாள் மற்றும் சித்ரா பௌர்ணமி தினங்களில் வெள்ளித்தேர் பவனியும், தினமும் தங்கத் தேர் பவனியும் நடைபெறும். ஒயிலாட்டம், வேலனாட்டம், சாமியாட்டம் போன்ற கிராமிய நடனங்களை பங்குனி உத்திர விழாவின்போது கண்டு களிக்கலாம். காலை 5.40 மணிக்கு விஸ்வரூப தரிசனம் (கட்டணம்), காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம், காலை 8.00 மணிக்கு வேடன் அலங்காரம், காலை 9.00 மணிக்கு பாலசுப்ரமண்யர் அலங்காரம், மதியம் 12.00 மணிக்கு வைதீகன் அலங்காரம், மாலை 5.30 மணிக்கு ராஜ அலங்காரம், இரவு 8.00 மணிக்கு புஷ்ப அலங்காரம் ஆகிய அலங்காரங்களில் முருகனை தரிசிக்கலாம்.
மலையடிவாரத்தில் பாத விநாயகரை தரிசித்து ஆசி பெற்று மலை ஏறத் தொடங்குகின்றனர். இளைப்பாறும் மண்டபங்கள், விநாயகர் - வள்ளி நாயகி - இடும்பன் ஆகியோரின் சந்நிதிகள் ஆகியவற்றை இடையிடையே காணலாம். மணிக்கட்டு மண்டபம் கடந்து வல்லப விநாயகரை தரிசித்து, கொடிமரம், தங்கரத மண்டபத்தைக் கடந்து ராஜ கோபுர வாசலை அடையலாம். பாரவேல் மண்டபம் மற்றும் நவரங் மண்டபமும் காணலாம். நவரங் மண்டபத்தில் உலோகத்தால் அமையப் பெற்ற சேவற் கொடியையும் அதன் மீது நிஜ சேவல் உட்கார்ந்து கூவும் அன்றாட நிகழ்ச்சியையும் காணலாம். இதனருகே உற்சவ மூர்த்திகளின் காப்பறையையும், தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவற்றுடன் சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. முதல் பிரகாரத்தில் சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ள மலைக்கொழுந்தீசரையும் - அம்பிகையையும் தரிசிக்கலாம். நவ வீரர்கள், சப்த கன்னியர்கள், கைலாசநாதர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சித்தர் போகரின் சமாதியையும் அவர் பூஜித்த நவதுர்க்கைகள், புவனேஸ்வரி தேவி மற்றும் மரகதலிங்கம் ஆகியவற்றை தரிசிக்கலாம். பொன்னால் வேயப்பட்ட விமானத்தைக் கொண்ட மூலஸ்தானத்தில் மூலவராக தண்டாயுதபாணி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். பால மூர்த்தியாக - கோவணாண்டி கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கரம் இடுப்பில் வைத்தும் மற்றொரு கரத்தில் வேலாயுதம் கொண்டும் காணப்படுகிறார். போகர் எனும் சித்தரால் நவபாஷாண கட்டாக செய்யப்பட்ட திருவுருவம் என்பதால் அபிஷேகம் செய்யப்பட்ட பால் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவை நோய்கள் தீர்க்கும் மருந்தாகிறது. 1. வீரம், 2. பூரம், 3. சாதிலிங்கம், 4. கௌரி, 5. வெள்ளை பாஷாணம், 6. மனோசிலை, 7. அரிதாரம், 8. சிங்கி, 9. தாளகம் ஆகிய நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட திருமேனி என சித்தர்களைப் பற்றிய குறிப்பொன்று கூறுகிறது. அறுபடை வீடுகளுள் ஒன்று - மூன்றாவது படை வீடு (மணிபூரக ஸ்தலம்).
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.