திருஆவினன்குடி வேலாயுதசுவாமி திருக்கோவில் (பழநி)
God Name : வேலாயுத சுவாமி மற்றும் சுந்தரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
திருவாகிய லட்சுமியும், ஆ எனும் காமதேனுவும் பூஜித்த ஸ்தலம் என்பதால் திருவாவினன்குடி எனப் பெயர் கொண்டது. கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வையாவிக் கோப்பெரும் பேகன் என்பவன் ஆவியர் (அ) ஆய் குலத்தவன். எனவே ஆவியர் தலைநகர் ஆவினன்குடி என்றானதாகவும் கூறப்படுவதுண்டு. திரு - லட்சுமி, ஆ - காமதேனு, இனன் - சூரியன், கு - பூமி, டி - அக்னி - ஆகியோர் வழிபட்டதால் ஆவினன்குடி என்றானதாகவும் கூறுவர். இந்திரன் பூஜித்த ஸ்தலம். தன்னை புறக்கணித்த திருமாலை மீண்டும் அடைய லட்சுமி இங்கு தவமிருந்து பலனடைந்தாள். விஸ்வாமித்ரரது ஆயுதத்தை வென்று அகம்பாவம் கொண்ட காமதேனு தன் தவறை உணர்ந்து இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றது. தான் கொண்ட சாபத்திலிருந்து விடுபட சூரியன் வழிபட்டுள்ளான். தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் தண்டனை அடைந்த வாயுவும், அக்னியும் வழிபட்டுள்ளனர் என ஸ்தல வரலாறு. நான்முகனை சிறையில் அடைத்து விட்டார் முருகன். அவருடைய விடுதலையைக் கோரி, திருமால், சிவன், இந்திரன் ஆகியோர் தேவர்களும் முனிவர்களும் சூழ திருவாவினன்குடி நோக்கி வரும் காட்சியை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் விவரித்துள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற ஸ்தலம்.
பிரதான கருவறையில் வேலாயுத சுவாமி எனும் பெயருடன் மயில் மீதமர்ந்த முருகப்பெருமான் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வைரக்கற்கள் பொதிந்த வேல் வைத்துள்ளார். மூலவராக சுந்தரேஸ்வரரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு வடகிழக்கே சரவணப் பொய்கை இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.