அருள்மிகு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி திருக்கோவில், நங்கநல்லூர்

God Name : -

ரஞ்சன்குடி கோவில்

Call : +91-

மூலவரான ராஜ ராஜேஸ்வரியின் விக்ரஹம் மரகதப் பச்சை நிறமும், தங்க ரேகையும் சேர்ந்த கல்லினால் உருவாக்கப்பட்டது. உற்சவர் ஸ்ரீ ராஜகோபால வரப்ரதா தேவி, சண்டி யாகத்திலிருந்து தோன்றியவள். பரசுராமகல்ப ஆதாரத்தினைக் கொண்டு ஸ்ரீ வித்யா முறைப்படி பூஜா முறைகள் செய்யப்படுகின்றன. மஹாசண்டி யாகத்தில் பூர்ணாஹுதி செய்வதற்கு முன் ருத்ரனை, கலச தீர்த்தத்தில் ஆவாஹனம் செய்து ருத்ர ஜபத்தால் மந்தரித்து, அபிஷேகம் செய்கின்றனர். ஹோம குண்டத்தில் அம்பாள் நின்று கொண்டு பூர்ணாஹுதி தட்டை பெற்றுக் கொள்வதாக ஐதீகம். பூப்ரஸ்தார விதிப்படி சக்ர ஆவரணங்கள் ஒன்பதையும் சம தளத்தில் பிரதிஷ்டை செய்வது நடைமுறை (காஞ்சி). ஆனால் இங்கு மேரு பிரஸ்தார விதிப்படி ஒன்றின் மேல் ஒன்றாக தூக்கி மலை போல் பிரதிஷ்டை செய்துள்ளனர். 51 மாத்ருகா பீஜாட்சரங்கள் கொண்டவள் என்பதால் 51 கோவில்களுக்கு போன பலன் கிட்டும்.
ஆலயத்துள் நுழைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது தத்தாத்ரேயர் திருவுருவம். அவருக்கு எதிரே ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியுள்ளார். அடுத்துள்ள சந்நிதியில் காட்சி தரும் ஸர்வ மங்கள மஹா கணபதியை தரிசித்து ஆசி பெற்று, வருண தன்வந்த்ரியின் தீர்த்த தரிசனம் முடித்து, பின்னர் மூலவரை தரிசிக்க செல்கின்றனர். த்வஜஸ்தம்பத்தின் முன்புறமுள்ள 16 படிகளில் ஏறி மூலஸ்தானம் செல்ல வேண்டும். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி - 16 படிகள் கொண்ட மஹா மேருவில் பிந்து ஸ்தானத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பூரண நிலவைப் போன்ற திருமுகத்தையும் எழிலார்ந்த திருமேனியையும் காண இரு கண்கள் போதாது. மஹா ஷோடஸ மந்திரத்தின் தத்துவத்தை விளக்கும் 16 படிகளில் ஏறும் வழிக்கு பூர்வ பக்ஷம் என்று பெயர். சங்கநிதி - பதும நிதி இடம் பெற்றுள்ளனர். முதல் படியில் காமேஸ்வரி நித்யா, இரண்டாம் படியில் பகமாலினி, மூன்றாம் படியில் நித்யக்லின்னா, நான்காம் படியில் பேருண்டா, ஐந்தில் வஹ்னிவாசினி, ஆறாம் படியில் மஹாவஜ்ரேஸ்வரி, ஏழாம் படியில் சிவதூதி, எட்டாம் படியில் த்வரிதா, ஒன்பதில் குல சுந்தரி, பத்தாம் படியில் நித்யா, பதினொன்றில் நீலபதாகா, 12ம் படியில் விஜயா, 13ம் படியில் சர்வ மங்களா, பதினான்காம் படியில் ஜ்வாலமாலினி, பதினைந்தாம் படியில் சித்ரா என பிரதமை முதல் பௌர்ணமி வரை கொலுவற்றுள்ளனர். இவர்களின் யந்திரங்களும் படியின் இருபுறமும் சுவரில் வைக்கப்பட்டுள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.