அருள்மிகு பத்மகிரீசர் திருக்கோவில் (திண்டுக்கல்)

God Name : பத்மகிரீசர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

பத்மகர்ணி எனும் தடாகத்தின் தாமரை மலரின் காயில் லிங்க வடிவம் கொண்டு தோன்றினார் இறைவன். நெல்லிவனமாக விளங்கும் இந்த க்ஷேத்ரத்தில் ஒரு பர்வதமாக வளர்ந்து நின்றார். இதனால் பத்மகிரீசர் எனும் பெயர் கொண்டார். அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்களுக்கு, பத்மகிரியில் ஒரு பிலத்தை உண்டாக்கி அதில் புகலிடம் அளித்தார். பிலத்திலிருந்து வெளி வந்த தேவர்களை, திண்டி எனும் அசுரன் துன்புறுத்தி வந்தான். இதனால் வானவர்களைக் காக்க காலபைரவர் வடிவில் பத்மாசலேசன் என்ற பெயர் கொண்டு தோன்றிய சிவபெருமான், திண்டி எனும் அசுரனைத் தனது சூலத்தால் வதைத்தார். திண்டி மாசுரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த மலை உச்சியில் சூக்ஷ்ம லிங்கமாக எழுந்தருளினார். இதனால் இவ்வூருக்கு திண்டிச்சரம் என்ற பெயர் வந்தது. பொருளாசை கொண்ட சுமேதன் எனும் அந்தணன், விஸ்வாமித்ரரின் சாபம் கொண்டு பொன்மானாக மாறி இத்தலம் வந்து, மலை மேல் சூக்ஷ்ம லிங்கமாக இருந்த சிவனார் மேற்கு முகமாகத் திரும்பி அவனை அழித்தார். வார்த்துலாசுரன் பழையபடி கந்தர்வனாகவும், பொன் மான் அந்தணனாகவும் பழைய உருவம் பெற்று சாப விமோசனமடைந்தனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அனலாக்ஷன் எனும் அசுரன் அன்னை அபிராமாவுடன் போர் புரிய வந்து, அன்னையின் சூலத்தால் அழிவுற்றான். உக்ரம் தணியாதிருந்த அன்னையை அனைவரும் சாந்தப்படுத்தினர். பின்னர் பத்மகிரீசர் வந்து அபிராமாவை மணக்கின்றார். சந்திரன், கார்த்திகைப் பெண்கள், வருணன், பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி ஆகியோர் வழிபட்ட ஸ்தலம். சிவனாரின் கட்டளைப்படி கங்காதேவி தோற்றுவித்த தீர்த்தமே பஞ்ச கங்கா தீர்த்தம். பத்மகிரீசர் ஆலயத்தில் தீபங்களை ஏற்றுபவர் பெறும் பேறுகளைப் பெறுவர். நகரின் மையப் பகுதியிலுள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் மூலவராக காளத்தீஸ்வரரும், அம்பிகையாக ஞானாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், நால்வர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம். பத்மகிரீசர் மலைக்கோவிலின் பிரம்மோத்ஸவத்தின்போது உற்சவ மூர்த்திகளை நகரில் எழுந்தருளச் செய்யும் மண்டபமாக விளங்கி வந்தது. விஜயநகர மன்னன் அச்சுதராயர் இம்மண்டபத்தைக் கோவிலாக்கி காளத்தீஸ்வரரையும் ஞானாம்பிகையையும் எழுந்தருளச் செய்தார் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
600 படிக்கட்டுகளைக் கொண்ட அழகிய மலை. தாமரை மலரின் வடிவத்தில் அமைந்திருப்பதால் பத்மகிரி என்ற பெயரைக் கொண்டது. மலை மீதிருந்த கோவில் சிதைந்து போனதால், மலைக்குக் கீழே புதிய கோவில் அமைத்துள்ளனர். மூலஸ்தானத்தில் மூலவராக பத்மகிரீசர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். அபிராமா எனப்படும் அபிராமாம்பிகை அம்பிகையாக எழுந்தருளி அருள் புரிகின்றாள். அபிராமா அம்மன் சுதந்திரிகை என்ற வகையைச் சேர்ந்த தெய்வம். சுதந்திரிகைக்குத் தனி உற்சவம் உண்டென்பதால், அபிராமாவிற்கு 15 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. அழகான கோஷ்ட மூர்த்தங்கள். கருவறையின் புறச்சுவர்களில் எண்ணற்ற மூர்த்தங்களையும், பஞ்ச உலோகத்தில் வார்க்கப்பட்ட பல்வேறு விக்ரஹங்களையும் தரிசிக்கலாம். பத்மகிரீசர் - அபிராமா இருவரையும் யந்திர - மந்திர முறைப்படி அகஸ்தியர் வழிபட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.