அருள்மிகு அஞ்சலிவரத விஸ்வரூப ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோவில் (சிறுமலை)

God Name : அஞ்சலிவரத விஸ்வரூப ஆஞ்சநேயர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஆனி மாத மூல நட்சத்திரத்தன்று ஆரம்பிக்கும் விழாவையொட்டி சுதர்ஸன ஹோமம், பஞ்ச சுக்ல ஹோமம், மஹா சாந்தி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடைபெறும். சித்திரை மாதப்பிறப்பன்று 1008 பழங்களாலான அலங்காரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் ராஜ அலங்காரம், தியான மாருதி அலங்காரம், திருப்பதி ஏழுமலையான் அலங்காரம், பஞ்சமுக அலங்காரம், வயோதிக அலங்காரம் என வெவ்வேறு அலங்காரங்களில் ஜொலிப்பார். மார்கழி ஹனுமத் ஜெயந்தியன்று 1008 ஜிலேபி காப்பு, புஷ்பாஞ்சலி, முத்தங்கி சேவை, கரும்பு அலங்காரம் என ஆண்டு முழுவதும் சிறப்பு ஆராதனைகள் நடந்த வண்ணமிருக்கும். வெண்ணைக்காப்பு, செந்தூரக் காப்பு, பச்சைக் காப்பு, வடைமாலை ஆகியன நேர்த்திக்கடனாக செய்கின்றனர். 16 வகை திரவிய அபிஷேகம், பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் என தொடர்ந்து அபிஷேகங்கள் நடந்துகொண்டிருக்கும்.
சஞ்சீவிமலை எனப்படும் சிறுமலையின் வாயு மூலையில் இக்கோவில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள அஞ்சலிவரத விஸ்வரூப ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. 16 அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி சாளக்ராமத்தால் உருவானது. தீட்சண்யமான பார்வை, கூப்பிய கரங்கள், ஆஜானுபாகு தோற்றம் கொண்டு கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். திருவடியருகே கதாயுதம் உள்ளது. இரு கால்களுக்கு இடையே சுருட்டி வைத்துள்ள வாலும், அதில் கட்டப்பட்டுள்ள மணியும் பார்க்க அழகாக உள்ளது. நவகிரகங்களை வாலில் கட்டி வைத்திருப்பதாக ஐதீகம். விமானத்தில் சுந்தர காண்ட நிகழ்வுகளை சிற்பங்களாக வடித்துள்ளனர். மகாமண்டபத்தின் இருபுறமும் சுக்ரிவன், அங்கதன், நளன், நீலன், ஜாம்பவான் மற்றும் இரு வானர வீரர்களைக் காணலாம். கோஷ்டத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர், ராமபக்த ஹனுமன், ஆத்யந்த பிரபு ஆகிய சுதை சிற்பங்களைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.