அருள்மிகு சதுர்முக சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் (சின்னாளப்பட்டி)
God Name : சிவசுப்ரமண்ய சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
பிரம்மரிஷி பட்டம் பெறும் முயற்சியில் இருந்த விஸ்வாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி குங்குமப்பொட்டு வைக்கும்படி கேட்கிறாள். மலைத்துப் போய் அதிசயித்து நின்ற முனிவர் அவ்வாறே செய்தார். அங்குள்ள குளத்தில் தனது பிம்பத்தைப் பார்ப்பதற்காக குனிந்தாள் சிறுமி. குங்குமப் பொட்டின் துகள்கள் குளத்து நீரில் விழுந்து கரைந்தன. அடுத்த விநாடியே, அங்கு ஒளி பொருந்திய முகங்களாக ஒன்றன்பின் ஒன்றாக நான்கு முகங்கள் தோன்றி இணைந்தன. இப்படி உருவானவனே இந்த முருகப் பெருமான். நான்முக முருகனின் அருட்பார்வை பட்டதும், விஸ்வாமித்ரரின் மனதில் குடி கொண்டிருந்த தான் எனும் அகந்தை அகன்றது என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவராக சிவசுப்ரமண்ய சுவாமி எழுந்தருளி அருள் புரிகின்றார். தேவியர்கள் இருவரும் உடன் உள்ளனர். சிறப்பு மூர்த்தமான சதுர்முக முருகன் மயில் மீதமர்ந்த கோலத்தில் வடக்கு பார்த்து தரிசனம் தருகின்றார். நான்கு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்ட அழகிய திருவுருவம். வலச்சுற்றில் விநாயகர், தண்டபாணி சுவாமி, பாலசுப்ரமண்யர், குக்குட சுப்ரமண்யர் மற்றும் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.