அருள்மிகு கதலி நரசிங்கப் பெருமாள் திருக்கோவில் (அம்மையநாய்க்கனூர்)
God Name : கதலி நரசிங்கப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
ஸ்தல வரலாறு:
வேடன் வடிவில் வந்த சிவபெருமானுடன் போர் புரிந்த அர்ச்சுணன், பின்னர் சிவபெருமான் எனத் தெரிந்ததும், தவமிருந்து பாசுபதம் வேண்டிப் பெற்ற நிகழ்வு நடந்த ஸ்தலம் என்பார்கள்.
கதலிவனமாக இருந்த இப்பகுதியில் ஒரு மரத்தடியில் பசுக்கள் தாமாகவே பால் சொரிவதைக் கண்டு, அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தனர். கடப்பாறை பட்டதும் ரத்தம் பெருக்கெடுத்து வந்தது. லிங்கம் புதைந்திருப்பது தெரிய வந்தது. லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லையாம். லிங்கத்தைச் சுற்றி கோவில் எழுப்பப்பட்டது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஒரு வைஷ்ணவர் தினமும் திருமாலை சேவித்த பின்னரே உணவு உட்கொள்வாராம். ஒரு நாள் இவ்வாலயத்திற்கு வந்தவர் இங்கு திருமால் இல்லையே என வருந்தித் திரும்பிச் செல்ல முயன்றபோது, சிவபெருமான் தாமே திருமாலாகக் காட்சி தருவதாகக் கூறி, அவ்வாறே செய்தார் என ஸ்தல வரலாறு.
இது சைவ-வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மூலஸ்தானத்தில் கதலி நரசிங்கப் பெருமாள் சங்கு-சக்ரதாரியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். நரசிங்கப் பெருமாளுக்கு முன்பாக கதலி ஈஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். உற்சவ மூர்த்திகள் அழகாக உள்ளன. தாயார் கமலவல்லி எழுந்தருளி தரிசனம் தருகிறார். நுழைவு வாயிலில் பயிர் தந்த விநாயகரும், கருடாழ்வாரும் தரிசனம் தருகின்றனர். வெளிப் பிரகாரத்து சந்நிதியில் பைரவர், நவகிரகங்கள் சந்நிதி கொண்டுள்ளனர். முருகனின் திருவுருவமும், நவநீத கிருஷ்ணனின் உலோகப் படிமமும் கொள்ளை அழகுடன் இருக்கின்றன. மகாமண்டபத்தில் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.