அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் (தேவதானப்பட்டி)

God Name : மூலவர் இல்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: கொடியவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்திய கொடுங்கோல் மன்னன் வஜ்ரதத்தன் என்பவன் மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை தண்டிக்க புறப்பட்டான் இந்திரன். பல வடிவங்கள் கொண்டு போர் புரிந்த வஜ்ரதத்தனை இந்திரனால் ஒடுக்க முடியவில்லை. அனைவரும் சென்று காமாட்சியை வேண்டினர். அன்னை காமாட்சி அவனது தலையை கொய்து எறிந்தாள். துர்க்கையை விட்டு அறுபட்ட தலையை மிதிக்கச் சொன்னாள். அறுபட்ட தலை சிதைந்ததால் அவனால் வேறு வடிவம் எடுக்க முடியாது போயிற்று. சப்த கன்னியர்கள் அன்னைக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தனர். சம்ஹாரம் செய்த தோஷம் நீங்கிட, இங்குள்ள மூங்கில் காட்டில் அமர்ந்து தவமிருந்தாள் காமாட்சி. அன்னை தவமிருந்த இடம் அம்மன் மச்சு என்றழைக்கப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் நீர், மஞ்சளாறு எனப் பெயர் கொண்டு ஓடுகிறது. ஆற்றில் மிதந்து வந்த மூங்கில் பெட்டியில் கிடைத்தவள் காமாட்சி. குச்சுப்புல்லால் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்த பெட்டியை வைத்தனர். பூஜை செய்யும் உரிமை உள்ளவருக்கும், ஜமீன்தாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கதவை பூட்டி விட்டனர். இன்றுவரை திறக்கப்படவேயில்லை. பூட்டிய கதவிற்கே பூஜை செய்கின்றனர்.
பிரதான சந்நிதியும் கதவும் உண்டு. ஆனால் மூலவரின் திருவுருவமோ, உற்சவரின் விக்ரஹமோ கிடையாது. அரூப வழிபாடு நடக்கின்றது. மூடப்பட்ட கதவின் முன்னே நாகபீடம் அமைத்து பூஜை செய்கின்றனர். கதவின் முன்பு சூலாயுதமும், சூலாயுதத்தின் இரு பக்கங்களிலும் பித்தளை வேல்களும் நடப்பட்டு, புடவை சாத்தி அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். மூங்கிலணை காமாட்சி எனப் பெயர். பூஜை மண்டபத்தின் மேல் விதானத்தில் கௌளி செதுக்கப்பட்டுள்ளது. இங்கு கௌளி குறி கேட்டல் முக்கியமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள அணையா விளக்கில் பக்தர்கள் நெய் ஊற்றிக் கொண்டே இருக்கின்றனர். அதிகமாக வரும் நெய்யை அண்டாக்களில் சேகரித்து வைக்கின்றனர். ஈ, எறும்பு வருவதில்லை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.