அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோவில் (சுருளிமலை)
God Name : சுருளிவேலர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
கயிலையில் காவல் புரிந்த பிருங்கி எனும் கணநாதன் தனது கடமையிலிருந்து தவறியதால், முருகப் பெருமானை வேண்டி சாபவிமோசனம் பெற்று, கயிலைக் காட்சியை இங்கிருந்தபடியே கண்டான். இதனால் கைலாசப்பிடவு எனப் பெயர் பெற்றது. சுருளிமலையில் உற்பத்தியாகி ஓடி வரும் சுருளி நதி பல மூலிகைகளைத் தழுவிக்கொண்டு வந்து, மலையடிவாரத்தில் சுருளி நீர்வீழ்ச்சியாக வீழ்கிறது. பாவங்களைச் சுருள வைக்கும் புண்ணிய தீர்த்தம். இதில் நீராடுவோர் நோய்கள் நீங்கிச் சுகம் பெறுவர். பொன் ஊமத்தை என்ற அரிய வகை மூலிகை நிறைந்து காணப்படுகிறது. கந்தர் முருகனின் மூலிகை என்பார்கள். இதைப் பிழிந்து சாரெடுத்து, வெய்யிலில் காய வைத்து, செம்பை உருக்கிக் கலந்தால் பசும் பொன் கிடைக்கும் என்பார்கள். இதன் வாசனை கொடிய விலங்குகளையும் வசியப்படுத்தும் தன்மை உடையது எனக் குறிப்பொன்று கூறுகிறது. இது போன்ற பல அரிய வகை மூலிகைகள் இங்கு கிடைக்கின்றன. இங்குள்ள பாறைகள் மீது எப்போதும் நீர் விழுந்து கொண்டிருந்தாலும், பாறைகள் வழுக்குவதில்லை. தவிர, இந்தத் தண்ணீரில் நனையும் மரம், இலை போன்றவைகள் பாறைகளாக மாறும் என்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரிவுகளுள் ஒன்று சுருளிமலை. வள்ளித் திருமணத்துச் சீதனமாக நம்பிராஜன் கொடுத்ததே இந்தச் சுருளிமலை என்பர். ஆடி, தை மாதங்களிலும், புரட்டாசி மஹாளய அமாவாசை மற்றும் அமாவாசை தினங்களிலும், இங்கு அருவியில் நீராடி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவி வற்றாது இருப்பினும், ஜூன் - அக்டோபர் சீசனில் நிறைய தண்ணீர் இருக்கும்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ளது சுருளிமலை. இம்மலையில் விபூதி குகை, சர்ப்ப குகை, பாட்டையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை எனப் பல குகைகள் காணப்படுகின்றன. ஆண்டு முழுவதும் வற்றாத சுருளி அருவியில் குளிக்க ஆனந்தம் பெருகும். மலையடிவாரத்தில் சுருளி நதிக்கரையில் சிவாலயமும், வீரநாராயணப் பெருமாள் கோவிலும், மரத்தடியில் கன்னிகா பரமேஸ்வரி கோவிலும் உள்ளன. ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு குன்றுகள். முதல் குன்றின் சுரங்கப்பாதை வழியாகச் சென்றால் சிவலிங்கத்தைத் தரிசிக்கலாம். மேலே உள்ள குன்றில் விபூதிக் குகை. விபூதிக் குகையில் உள்ள அதிசயத்தைக் காணலாம். சுருளி அருவியிலிருந்து 3 பர்லாங் தூரத்தில் கைலாசப் புடவு எனப்படும் கைலாய குகை உள்ளது. இயற்கையாக அமைந்த இக்குகையில் மூலவராக சுருளிவேலர் ஆண்டிக் கோலத்தில் தரிசனம் தருகிறார். மலைக் கோவிலில் பிள்ளையார், சிவலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். துவாதச (12) ஆதித்யர்கள், அஸ்வினித் தேவர்கள் (2), ருத்ரர் (11), அஷ்ட வசுக்கள் (8) ஆகிய 33 பேரையும், அவர்களின் பரிவாரங்களான ஒரு கோடி தேவர்களையும், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.