அருள்மிகு கௌமாரி அம்மன் திருக்கோவில், கம்பம்
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் ஸ்ரீ கௌமாரி அம்மன். சுயம்பு வடிவத்தினள். சுயம்புவாகத் தோன்றியவளை ஆதி அம்மனாகப் போற்றி வழிபடுகின்றனர். அருகிலுள்ள மற்றோர் அம்மன் விக்ரகம் பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். கிழக்கு பார்த்த சந்நிதி.
வலச்சுற்றில் ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ அனுக்ஞை விநாயகர், முருகன் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். காவல் தெய்வமாக சங்கிலி கருப்பு எழுந்தருளியுள்ளார். கம்பீரமான தோற்றத்தில் மீசையை முறுக்கியபடி வீரபத்திரர் காட்சி தருகிறார்.
அம்மனை விதவிதமாக அலங்கரித்து அழகுபார்த்து மகிழ்கின்றனர். அம்மனை அபிஷேகித்த நீரும் வேப்பிலையும் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர். அம்மை நோய்க்கு கண்கண்ட மருந்து என்பார்கள்.
வயிற்றுவலி குணமடைய மாவிளக்கு பிரார்த்தனை, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க என ஒவ்வொன்றிற்கும் நேர்த்திக்கடன் செலுத்திப் பிரார்த்திக்கின்றனர்.
ஆயிரம் கண் பானையில் தண்ணீரை நிரப்பி எடுத்துக்கொண்டு பிரகார வலம் - அடி பிரதட்சணம் செய்தால் கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என நம்பப்படுகிறது.
சித்திரை மாதத்தில் 21 நாட்களுக்குத் திருவிழா நடைபெறும். வெள்ளிக்கிழமை தினங்களில் உற்சவ அம்மன் பல்லக்கில் வீதி உலா வருகிறாள். பல்லக்கைப் பெண்கள் மட்டுமே சுமந்து வருகின்றனர்.
இவ்வூரில் காசி விஸ்வநாதர் கோவில், சாரங்கநாதப் பெருமாள் கோவில், சுப்ரமண்யஸ்வாமி கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.