அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில், குச்சனூர்
God Name : மூலவராகவும் உற்சவராகவும் சனீஸ்வர பகவான்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
குலிங்க நாட்டை ஆண்ட மன்னனுக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் பல யாகங்களும் ஹோமங்களும் செய்து இறைவனை பிரார்த்தித்தான். அவனும் அவனது மனைவியும் தான தர்மங்கள் பலவற்றை செய்து வந்தனர். இவ்வூரை சேர்ந்த பிராமண தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பால் வாங்க கூட காசில்லாமல் வறுமையில் வாடுபவனான பிராமணன் அரசனை அணுகி தனது வறுமை நிலையை எடுத்து உரைத்தான். குழந்தையை தானே தத்து எடுத்துக் கொள்வதாக கூறிய அரசன், அதை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வளர்த்து வந்தான். சந்திரவதனன் எனப் பெயரிட்டான். சகல சாஸ்திரங்களையும் முறைப்படி கற்றுணர்ந்தான் சந்திரவதனன். இந்நிலையில் ராணி கருவுற்று, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். சுதாகன் எனப் பெயரிட்டு வளர்த்தாள். சந்திரவதனனும் சுதாகனும் இணை பிரியா சகோதரர்களாக அன்புடன் இருந்தனர். சந்திரவதனன் அரியாசனத்தில் அமர்ந்து தம்பியுடன் இணைந்தே ஆட்சி புரிந்தான். தனது தந்தையை ஏழரை நாட்டு சனி பிடிக்கவிருப்பதால் அவர் கவலையாக இருக்கிறார் என தெரிந்து கொண்ட சந்திரவதனன் சனீஸ்வர ப்ரீத்தி செய்து மனமுருக வழிபட்டான். பிரத்யட்சமான சனீஸ்வரரிடம் தனது தந்தையை பிடிக்க வேண்டாம் என வேண்டினான். தனது கடமையை செய்யாமல் இருக்க முடியாது என்றார் சனீஸ்வரர். தந்தைக்கு மாற்றாக என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான் சந்திரவதனன். அடுத்த வாரமே உன்னைப் பற்றுவேன் என்றார் சனீஸ்வரர். தன்னை சனி பிடிக்கும் நேரத்தில் அரண்மனையில் இருக்க வேண்டாம் என நினைத்த சந்திரவதனன் காட்டிற்குள் சென்று சனீஸ்வரர் சிலை ஒன்றை செய்து பூஜிக்கலானான். பூஜையில் மகிழ்ந்த சனி பகவான் உன்னை ஏழரை நாழிகை மட்டுமே பிடிப்பேன் என வாக்களிக்கிறார். அண்ணனை அரண்மனையில் காணாததால் தேடிக் கொண்டு வந்த தம்பி, காட்டில் அலைந்து திரிந்த களைப்பில் மரத்தடியில் படுத்து உறங்கி விட்டான். மகன்கள் இருவரையும் காணாததால் கவலையுற்ற அரசன் ஆட்களை அனுப்பி தேட செய்தான். தம்பியை இரு துண்டாக வெட்டி போட்டு விட்டான் அண்ணன் என காவலாளிகள் வந்து அரசனிடம் கூறினர். தம்பியையே வெட்டத் துணிந்த அண்ணனை சிரச்சேதம் செய்யுங்கள் என கட்டளையிடுகிறான் அரசன். சந்திரவதனின் தலையை காவலாளிகள் வெட்ட முற்படும் சமயம், ஏழரை நாழிகை முடிந்து விட்டதால் சனி பகவான் விலகிக் கொண்டார். காட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி எழுந்ததும், அண்ணனை காணவில்லை. சரி அரண்மனைக்கு திரும்பி போவோம் என முடிவெடுத்து அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அண்ணனின் தலை தப்பியது. தந்தைக்கு பிடிக்கவிருந்த ஏழரை சனியை தான் ஏற்றுக் கொண்டதிலிருந்து நடந்தவற்றை விளக்கி கூறினான் சந்திரவதனன். அப்போது பிரத்யட்சமான சனீஸ்வர பகவான், ஏழரை நாழிகை உன்னைப் பிடித்திருந்த சமயம், நீ நைவேத்தியம் செய்த பொருட்களையே, தம்பியின் வெட்டுண்ட தலை போல் காவலாளிகளை காணச் செய்து உன்னை சிரச்சேத தண்டனை வரை கொண்டு சென்றேன். ஏழரை நாழிகை உன்னை ஆட்டி வைத்தது நான்தான் என்றார். நீ என்னை வழிபட்ட அதே செண்பக ஆரண்யத்தில் சுரபி நதிக்கரையில் நான் நிலைத்திருப்பேன் எனக் கூறி மறைந்தார். சனீஸ்வரர் சுயம்புவாக தோன்றிய அதே இடத்தில் அவருக்கு கோவில் எழுப்பினார்கள் என ஸ்தல வரலாறு. குச்சுப்புல் வேய்ந்து கொட்டகை எழுப்பியதால் குச்சனூர் எனப் பெயருற்றதாக கூறுவர். ஸ்தல விருட்சமாக விடைத்தலை மரம் உள்ளது. 5000 ஆண்டுகள் பழமையானது என்கின்றனர். எள்ளை விட சிறிய இலை, மஞ்சள் - வெள்ளை பூக்கள் கொண்ட மரம். பூக்கள் காய்ந்த பின்னரே கீழே உதிருமாம்.
மூலஸ்தானத்தில் மூலவராக சனீஸ்வர பகவான் எழுந்தருளி அருள் புரிகின்றார். சுயம்பு வடிவினர். லிங்கம் போன்று உயரமும் அகலமும் கொண்ட அமைப்பில் தோன்றியுள்ளார். அரக்கு சிவப்பும் கருமையும் கலந்த நிறத்தில் திருமேனி. வெள்ளிக் கிரீடம், விபூதிப் பட்டை, நாமம் ஆகியனவற்றால் அலங்கரித்துள்ளனர். பிரம்மா - விஷ்ணு - சிவன் மூவரும் ஐக்யம் என்பதை உணர்த்தும் வகையில் மூன்று கண்மலர்கள் சாத்தப்பட்டுள்ளன. இவற்றிற்குக் கீழே, மீசை, மூக்கு மற்றும் அதரங்கள் பொருத்தி உள்ளனர். வில், அம்பு, சூலம், அபய-வரத ஹஸ்தங்கள் கொண்டுள்ளார். கீழே இரண்டு பக்கங்களிலும் வெள்ளியால் செய்த காக உருவங்கள் காணப்படுகின்றன. மூலவருக்கு வெள்ளிக்கிழமை தினங்களில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். மற்ற அபிஷேகங்கள் எல்லாம் உற்சவருக்குத்தான். மூலவருக்கு முன்பாக சற்று தள்ளி வலப்புறமாக உற்சவ மூர்த்தி எழுந்தருளி தரிசனம் தருகிறார், காக வாகனத்தில் அமர்ந்த கோலம். ஆத்தங்கரை பிள்ளையாரை தரிசித்து ஆசி பெற்று, கன்னிமார் கோவில், நாகர் கோவில் ஆகியன தரிசிக்கலாம். கம்பீரமாக குதிரையில் அமர்ந்து காட்சி தரும் சோனை கருப்பண்ணசாமி காவல் தெய்வமாக போற்றப்படுபவர். சுருளி நதியின் ராஜ வாய்க்காலான சுரபி நதி, கோவிலருகே சலசலவென ஓடுகிறது. குளிர்ந்த காற்று, குளிர்ந்த நீர் பார்த்ததும் ஆசை தீர குளிக்க தூண்டும். எதிரே காக வாகன மண்டபம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.