அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோவில் (உத்தமபாளையம்)

God Name : காளத்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் காளத்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். வடபுறமாக தனி சந்நிதி கொண்டு ஞானாம்பிகை அருள்பாலிக்கின்றார். ராஜகோபுரத்தின் தென்பகுதியில் விநாயகரும், வட பகுதியில் முருகனும் எழுந்தருளியுள்ளனர். சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே ஷண்முகர் எழுந்தருளியிருப்பது சோமாஸ்கந்த அமைப்பை கொண்டதாகும். ஷண்முகர் சந்நிதியில் நவவீரர்களையும் தரிசிக்கலாம். ராஜ கணபதி, மீனாட்சி - சொக்கநாதர், காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், சஹஸ்ரலிங்கம் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். கல்லாலமரம் இல்லாத தட்சிணாமூர்த்தி வித்தியாசமாக காட்சியளிக்கிறார். இடது கையில் வீணை, வலது கையில் அட்சர மாலை கொண்டு சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். வழக்கமாக தரிசிக்கும் பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய சப்த மாதர்களுடன் காளி தேவியும் இடம்பெற்று அஷ்ட மாதர்களாக தரிசனம் தருகின்றனர். சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரை அவர்களது மனைவிகளுடன் காணலாம். ஐஸ்வர்யலட்சுமி மற்றும் குபேரன் எழுந்தருளியுள்ளனர். முன்மண்டப விதானத்தில் 27 நட்சத்திர மண்டலத்தின் மத்தியில் வாஸ்து பகவான் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். சூரிய மண்டலத்தின் நடுவே சூரிய பகவான் காணப்படுகிறார். 12 ராசி சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. ஏழு நாக தேவதைகள் சுதை சிற்பங்களாக இருக்க, நாகர் எழுந்தருளி தரிசனம் தருகிறார். ராகு - கேது தனி சந்நிதி கொண்டுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.