அருள்மிகு கௌமாரி அம்மன் திருக்கோவில் (வீரபாண்டி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
ஸ்தல வரலாறு:
இயற்கை எழில் சூழ் வனப்பகுதியின் ஊடே ஓடி வரும் முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஆலயம்.
வனமாக இருந்த இப்பகுதியில் அன்னை உமாதேவி அமர்ந்து தவம் மேற்கொண்டாள். வனத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த முனிச்ரேஷ்டர்களை துன்புறுத்தி வந்த அசுரன் ஒருவன் உமையவளை தாக்க முற்பட்டான்.
இதனால் கோபம் கொண்ட தேவி ஒரு புல்லை கிள்ளி அவன் மீது வீசினாள். அது அவனது உடலை இரண்டாக பிளந்து அவனை மாய்த்தது. முனிச்ரேஷ்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கேயே கோவில் கொண்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஒருவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தபோது, பசு ஒன்றின் கால் புற்றில் இடறியதால், புற்றிலிருந்து ரத்தம் பெருகியது. புற்றை கிளறி பார்த்ததில் சுயம்புவாக அம்மன் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மதுரையை ஆண்ட வீரபாண்டி எனும் அரசனின் பெயரால் இவ்வூர் வீரபாண்டி எனப்படுகிறது. அரசன் வீரபாண்டி கண் பார்வையை இழந்து கஷ்டப்பட்டான். அவனது கனவில் தோன்றிய இறைவன் கூறியபடி, இத்தலத்திற்கு வந்து கௌமாரியை வேண்டி ஒரு கண்ணின் பார்வையைப் பெறுகிறான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள கௌமாரி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. சுயம்பு வடிவினள். சுற்றுவட்டார கிராமத்து மக்களின் குலதெய்வமாக விளங்குகிறாள்.
காவல் தெய்வமான கருப்பண்ணசாமி கோவிலின் முன்பாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
கண் பார்வையில் கோளாறு உள்ளவர்கள் அம்மனை பிரார்த்தித்து, திருமஞ்சனம் செய்த தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று நற்பலன் அடைகிறார்கள்.
ஆயிரம் கண் பானையில் தீபம் ஏற்றி சுமந்து வந்து வழிபடுதல், அக்னி சட்டி ஏந்தி வருதல், காவடி தூக்கி வருதல், மாவிளக்கு போட்டு வழிபடுதல், மண் பொம்மை உருவங்கள் செய்து வந்து அர்ப்பணித்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் வேண்டுதல்கள் ஏராளம்.
சித்திரை மாதம் முதல் செவ்வாயில் துவங்கும் விழாவை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். சூலம் போன்று மூன்று பிரிவுகளை உடைய, அத்தி மரக்கிளை ஒன்றை வெட்டி எடுத்து வந்து கம்பத்தடி மண்டபத்தில் ஸ்தாபனம் செய்து, பூஜித்து விழாவை ஆரம்பிப்பார்கள்.
வீரபாண்டியை சுற்றியுள்ள ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் முளைப்பாரிகளுடன் கோவிலுக்கு வந்து கும்மியடித்து கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
8 நாட்கள் நடைபெறும் விழாவில் தேரோட்டமும் இருக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.