அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் (ஆண்டிபட்டி)

God Name : சுந்தரேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. உற்சவராக சோமாஸ்கந்தர் எழுந்தருளியுள்ளார். தெற்கு பார்த்த சந்நிதியில் மீனாட்சி அன்னை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வீராசன தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் வித்தியாசமாக இருக்கின்றது. வழக்கமாக காணப்படும் சனகாதி முனிவர்களுக்கு மாற்றாக சப்தரிஷிகள் இடம் பெற்றுள்ளனர். லிங்கோத்பவர் சிற்பத்தில் பிரம்மா-விஷ்ணு திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. ஸ்வாமி-அம்பாள் சந்நிதிகளுக்கிடையே முருகன் எழுந்தருளியிருப்பது சோமாஸ்கந்த அமைப்பு எனக் கூறுவர். பிரகார வலச்சுற்றில் கோடி விநாயகர், சந்தான விநாயகர், நாகர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சூரிய-சந்திரர்கள் அருகருகே காணப்படுவது விசேஷம். அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். ஸ்தல விருட்சமான வில்வ மரத்தடியில் சிவனாண்டி சித்தரின் ஜீவசமாதி இருப்பதாக கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.