அருள்மிகு ஏடகநாதர் திருக் கோவில் (திருவேடகம்)

God Name : ஏடகநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

பாண்டியனின் வெப்பு நோயினை, மடப்பள்ளி சாம்பலை பூசி குணமாக்குகிறார் திருஞானசம்பந்தர். இதில் தோற்றுப் போன சமணர்கள் ஞானசம்பந்தரை அனல் வாதம் செய்ய அழைத்தனர். சம்பந்தரும் சமணர்களும் அவரவர் கருத்துக்களை ஏட்டில் எழுதி தீயிலிடவேண்டும் என நிபந்தனை. சமணர்கள் தீயிலிட்ட ஏடு எரிந்து சாம்பலாயின. ஞான சம்பந்தரின் திருநள்ளாற்றுப் பதிக ஏட்டினை நெருப்பில் போட்டதும் அது கருகாமல் பச்சைப் பசேலென நின்றது. அனல் வாதத்திலும் தோற்றுப் போன சமணர்கள் ஞானசம்பந்தரை புனல்வாதம் செய்ய அழைத்தனர். வாதி - பிரதிவாதி இருவரும் தத்தம் கருத்துக்களை ஏட்டில் எழுதி நீரில் இட வேண்டும். எவருடையது அழியாமல் இருக்கிறதோ அவரே வென்றவர் ஆவார் - இதுவே புனல்வாத போட்டி. சமணர்கள் தங்களது ஏட்டில் அத்தி - நாத்தி என எழுதி ஆற்றிலிட்டனர். விரைவாக ஆற்றில் ஓடி கடலுக்குள் கலந்து மறைந்து போயிற்று. வாழ்க அந்தணர் வானவர் ஆவினம் எனும் பதிகத்தை சம்பந்தர் ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் விட்டார். ஏடு ஓடும் திசையை எம்பி எம்பி பார்த்த கூன் பாண்டியனின் கூன் நிமிர்ந்தது. நீரை எதிர்த்து சுவடி செல்லும் வேகத்தை, குதிரையில் பின் தொடர்ந்து சென்று பார்த்தார் அமைச்சர் குலச்சிறையார். வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் பொன்னியல் திருவடி புது மலரவை கொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலார் ஏடகத்தொருவனே என்ற பதிகத்தை ஞானசம்பந்தர் பாடியதும் ஏடு நின்று விட்டது. ஏடு நின்ற இடம்தான் திருவேடகம். திரு - ஏடு - அகம் என்பதே திருவேடகம். எனவே இவ்வூர் திருவேடகம் எனப் பெயர் கொண்டது. வாது வென்ற விநாயகர் மீன் வடிவம் கொண்டு ஆற்றில் மிதந்து சென்ற ஏட்டினை இவ்விடத்தில் நிறுத்தியதாக திருவேடக ஸ்தல புராணம் கூறுகிறது. மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள லிங்கம் ஏடு போல தோற்றமளிப்பதால் ஏடகநாதர் எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர். ஞானசம்பந்தர் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம். பார்த்த பிரகரம் எனும் அடையாளம் உள்ள லிங்கம். ஆதியில் தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவுடையாரின் கீழே இருப்பதாகவும், தற்போதுள்ள லிங்கம் அதன் மீது ஸ்தாபிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். கார்த்திகை சோம வாரங்களில் 108 மற்றும் 1008 சங்காபிஷேகம் நடத்துகின்றனர். ஆவணி முதல் நாளன்று ஏடு எதிர் ஏறிய சம்பவத்தை ஐதீகமாக கொண்டாடுகின்றனர். தேவார திருத்தலம்
மூலவர்: ஏடகநாதர், அம்பாள்: ஏலவார் குழலி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஏடகநாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். சதுர பீட ஆவுடையாரில் குட்டையான பாணம் கொண்டு தரிசனம் தருகின்றார். அழகிய ஒளி வீசும் திருமேனி. கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. ஸ்வாமிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் ஸ்ரீ ஏலவார் குழலி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. நின்ற திருக் கோலம். கிழக்கு பார்த்த சந்நிதி. கோஷ்டத்தில் இச்சா சக்தி - கிரியா சக்தி - ஞான சக்தி ஆகிய வடிவங்களை தரிசிக்கலாம். இங்குள்ள ஸ்ரீ வாராஹி தேவி மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. ஏழு பஞ்சமி நாட்களில் தொடர்ந்து வழிபட்டால் தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார். இங்குள்ள கால பைரவரும் ஆற்றின் கரையிலுள்ள வன துர்க்கையும் விசேஷ மூர்த்திகள். வைகை ஆற்றின் படித்துறையில் ஸ்தல புராணத்தை புடைப்பு சிற்பமாக சித்தரித்துள்ளனர். கோவிலின் பின்புறம் உள்ள வைகையில் நீராடிய பின் ஏறி வருவதற்கு வசதி செய்துள்ளனர். ஆற்றின் கரையோரம் இருப்பதால் வெள்ளம் புகுந்துவிடாதிருக்க மூலஸ்தானம் சற்று உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. அழகிய நந்தவனம் ஒன்றும் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.