அருள்மிகு குமரன் கோவில் (நாலு கரை புத்தூர்)

God Name : வேலவன்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

இங்குள்ள முனிவர்களைத் துன்புறுத்தி வந்த நாகாசுரன் எனும் அசுரனை, முருகப் பெருமான் சம்ஹாரம் செய்தார் என்றும், அதனாலேயே வில்-அம்பு கொண்டு போர்க்கோலத்தில் வேடன் போல் இருப்பதாக ஸ்தல வரலாறு. அகஸ்தியர் தனது தோஷத்தைப் போக்கிக்கொள்ள லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு மேலும் தெரிவிக்கின்றது.
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள வேலவன், இடுப்பில் கத்தியைச் செருகிக்கொண்டும், கையில் வில்-அம்பு ஏந்தியும், காலில் வீரத் தண்டை அணிந்தும், உக்கிரமாகப் போர்க்கோலம் பூண்ட ஒரு வேடன் போலக் காட்சி தருகிறார். திருவடிகளில் பாதுகைகள் உள்ளன. இந்திர மயில் இடப்புறமாக உள்ளது. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். பின்னாளில் வில்லுக்கு மாற்றாக வேல் வைத்தனர் எனக் கூறப்படுகிறது. ஆவுடையார் இல்லாமல் பாணம் மட்டுமே உள்ள தாணுமாலய லிங்கத்தைத் தரிசிக்கலாம். சிவன்-விஷ்ணு-பிரம்மா மூவரும் இதனுள் அடக்கம் என ஸ்தல வரலாறு தெரிவிக்கின்றது. இதனை அகத்திய லிங்கம் என்றும் கூறுவார்கள். இலுப்பை மரத்தடியில் முனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். உருவம் இல்லாமல் அரூபமாக உள்ளார் என ஐதீகம். மண்டபத் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.