அருள்மிகு வல்லடிக்காரர் கோவில் (மேலூர்- அம்பலக்காரன்பட்டி)
God Name : வல்லடிக்காரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
இப்பகுதியில் அடிக்கடி திருடு போவது வழக்கமாக இருந்தது. ஏழை காத்த அம்மன் திருட்டை தடுத்து நிறுத்தினாள். இவ்வூரை சேர்ந்த பெண் ஒருத்தி தனது கணவனுக்கு சோறு எடுத்துக் கொண்டு வயக்காட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கையில், கல் தடுக்கி விழுந்து விட்டாள். தடுக்கிய இடத்தை பார்த்ததில் ரத்தம் பெருகிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. பின்னர் குறி சொல்வர்களை வைத்துக் குறி கேட்டபோது, புதையுண்டிருப்பது வல்லடிக்காரர் என தெரிய வந்து, அவரை வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக கூறப்படுகிறது. சீட்டு எழுதி பிரார்த்தனை செய்யும் பழக்கம் இருக்கின்றது. குழந்தை பாக்யம் வேண்டுபவர்கள் கோக்காமுதி மரத்தில் மரத்தொட்டில் கட்டி பிரார்த்தித்துக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் கரும்புத் தொட்டில் கட்டி அதில் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து ஆராதனை செய்கின்றனர். திருவிழாவின்போது அய்யனார் குளத்தில் குளித்துவிட்டு வந்து ஓலையில் எழுதியுள்ள வல்லடிக்காரரின் கதையை படிப்பார்கள். எட்டாம் நாள் மாடுகளை அடக்கும் விழா. பின்னர் வல்லடிக்காருக்கு பொங்கல் படைப்பார்கள்.
பிரதான கருவறையில் வல்லடிக்காரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். பூரணா - பொற்கலை தேவியர்கள் உடன் உள்ளனர். வல்லடிக்காரர் 60 கிராமங்களுக்கு பொதுவான காவல் தெய்வமாக விளங்குகிறார். முன் பக்கமாக உள்ள சந்நிதியில் பெரிய கருப்புசாமி எழுந்தருளியுள்ளார். வெளிச்சுவற்றில் வாயிலோரமாக இரண்டு பிரம்மாண்டமான பூதங்களைக் காணலாம். கையில் கத்தியை தூக்கியபடி மிரட்டும் விழிகளுடன் காட்சி தரும் பூதங்கள், அதன் தோள்களின் மீது காலை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய அளவிலான சேமங்குதிரைகள். சேமங்குதிரைகள் பார்க்க அழகாக இருக்கின்றன. கோவிலின் பின்பகுதியில் கோக்காமுதி என்ற அரிய வகை விருட்சம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.