அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில் (திருவாதவூர்)

God Name : மாணிக்கவாசகர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் எனும் பட்டத்துடன் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராகப் பணிபுரிந்தவர். இவர் மிகுந்த சிவபக்தர். வாதவூரில் பிறந்தவர். மன்னனுக்காகக் குதிரைகள் வாங்க கோடி பொன்னுடன் புறப்பட்டு, திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவிலுக்கு வந்தார். குருந்த மரத்தடியில் ஞான குருவாக அமர்ந்திருந்த இறைவனிடம் தீட்சை பெற்று சிவபூஜையில் ஒன்றிப்போனார். கொண்டு வந்த பொருட்களைத் தெய்வத் தொண்டிற்குப் பயன்படுத்திவிட்டார். பொன்னும் பொருளும் கல்லும் சிற்பமுமாக மாறின. மன்னரின் ஆட்களிடம், ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என மன்னனுக்குத் தெரிவிக்கச் சொன்னார். சொன்ன நாளில் குதிரைகள் வராததால் வெகுண்ட மன்னன் அவரைத் தண்டிக்க முற்பட்டான். தான் குற்றம் செய்துவிட்டதால் தண்டிக்கப்பட வேண்டியவன்தான் என மனம் வருந்திய மாணிக்கவாசகர் தன் நிலைமையை இறைவனுக்கு எடுத்துரைத்தார். காட்டில் உள்ள நரிகளை எல்லாம் பரிகள் ஆக்கி, கணநாதர்களைக் குதிரை காப்பாளர்களாக்கி, அதில் தானும் ஒருவனாகத் தலைமைதாங்கிப் புறப்பட்டார் சோமசுந்தரக் கடவுள். அன்றிரவே பரிகள் நரிகளாக மாறின. மாணிக்கவாசகரைக் கொதிக்கும் வைகையாற்று மணலில் நிற்க வைத்துச் சவுக்கால் அடிக்க உத்தரவிட்டான் மன்னன். கால் சூடு தாங்க முடியாமலும், சவுக்கடியால் உடம்பிலிருந்து குருதி பெருகுவதாலும் கதறினார் மாணிக்கவாசகர். கோபம் கொண்ட சிவபெருமான் வைகைக்குக் கட்டளை பிறப்பிக்க, பொங்கியெழுந்தது வைகை. கரை உடைத்துச் செல்லும் வெள்ளம் கண்டு அஞ்சினர் மக்கள். மாணிக்கவாசகரின் பக்தியையும், ஆற்றலையும் புரிந்துகொண்ட பாண்டியன் அவரிடம் மன்னிப்புக் கோரினான். மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் - உயிர்களின் இயல்பை விளக்கி அவை நிலைத்திருக்க இறையருள் அவசியம் என்பதை விளக்கும் தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கியது எனப் போற்றப்படுகிறது. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பதற்கேற்ப ஏராளமான சிவனடியார்கள் கலந்துகொண்டு திருவாசகம் பாடுவதை மனம் ஒன்றிக் கேட்கும்போது பரவசம் அடைவோம் என்பது உண்மை.
பிரதான கருவறையில் மாணிக்கவாசகர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.