அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில் (திருமோகூர்)
God Name : மூலவர்: காளமேகப் பெருமாள், உற்சவர்: திருமோகூர் ஆப்தன்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். கிடைத்த அமிர்தத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் இரு சாராருக்குள் சச்சரவு ஏற்பட்டது. அப்போது திருமால் மோகினிப் பெண்ணாக அவர்கள் முன் தோன்றியதில், மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் வாளாவிருக்க, அமிர்தத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார் திருமால் எனப் புராண வரலாறு.
மோகினி வடிவில் அமிர்தம் வழங்கிய ஸ்தலம் திருமோகூர் என ஸ்தல வரலாறு. இதனால் மோகன க்ஷேத்ரம் என்ற பெயரைக் கொண்டது ஊர்.
முகம்மது அலி - ஹீரான் மதுரைக்கு படையெடுத்தபோது, திருமோகூர் ஆலயத்துள் புகுந்து பொன், பொருள் மற்றும் விக்ரகங்களைக் கொள்ளை அடித்தனர். கோவில் கதையைத் தீக்கிரையாக்கினர். கொள்ளையடித்த பொருட்களுடன் நத்தம் கணவாய் வழியே போய்க் கொண்டிருந்தபோது, கள்ளர்கள் அவர்களை வழிமறித்து, கொள்ளையடித்த பொருட்களை மீட்டனர் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
மோகூரில் பழையன் என்பவனின் கோட்டை ஒன்று காவல் அரணாய் விளங்கிற்று எனக் கூறுவர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: காளமேகப் பெருமாள், உற்சவர்: திருமோகூர் ஆப்தன், தாயார்: மோகனவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவரான காளமேகப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மோட்சத்திற்கு வழிகாட்டுபவராக இருப்பதால் மார்கபந்து என்று போற்றுகின்றனர்.
உற்சவர் திருமோகூர் ஆப்தன் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகின்றார். மிகவும் அழகான திருவுருவம். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
மோகனவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டு தரிசனம் தருகின்றார். இவருக்கு மோகூர்வல்லி என்ற திருநாமமும் உண்டு.
வடகிழக்கு மூலையில் சயனக் கோலத்தில் க்ஷீராப்திநாதர் சந்நிதி கொண்டுள்ளார். அபூர்வமாக பிரார்த்தனா சயனத்தில் காணப்படுகிறார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் திருவடிகளருகே காணப்படுகின்றனர்.
இத்தலத்தின் விசேஷ மூர்த்தியான சக்கரத்தாழ்வார் மூலவராகவும், உற்சவராகவும் தரிசனம் தருகின்றார். பெரிய பாறையில், பெரிய சக்கரம் ஒன்றும் அதன் நடுவே சக்கரத்தாழ்வாரின் திருவுருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் 16 திருக்கரங்களும், மூன்று கண்களும் கொண்ட அழகான திருமேனி. விரைவாகச் செல்லும் பாவத்தில் இருக்கின்றார். சக்கரத்தைச் சுற்றி 48 தேவதைகளின் திருவுருவங்களும், 6 வட்டங்களுக்குள் 154 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பின்புறமாக நரசிங்கப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
கிழக்கு வாசலைக் கடந்ததும் காணப்படும் கம்பத்தடி மண்டபத்தில், இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்த சின்ன மருது மற்றும் பெரிய மருது ஆகியோரின் சிலைகளைக் காணலாம். அடுத்துள்ள கருட மண்டபத்து தூண்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
திரிபங்கி நிலையில் அழகே உருவாக நிற்கும் சீதா தேவியும், ராமபிரானும், லக்ஷ்மணன், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் வேலைப்பாடுடையவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.