அருள்மிகு ஸ்ரீ குழந்தையானந்தா ஸ்வாமிகள் அதிஷ்டானம் (மதுரை)
God Name : ஸ்ரீ குழந்தையானந்தா ஸ்வாமிகள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
ஸ்தல வரலாறு: மதுரைக்கு அருகே உள்ள சமயநல்லூரைச் சேர்ந்த ராமஸ்வாமி அய்யர் - திரிபுரசுந்தரி தம்பதியினர், தங்களுக்கு புத்ர பாக்யம் தர வேண்டி அன்னை மீனாட்சியிடம் பிரார்த்தித்தனர். தங்களுக்கு பிறக்கும் குழந்தையை மீனாட்சிக்கே அர்ப்பணிப்பதாகவும் வேண்டிக் கொண்டனர். அன்னையின் அருளால் திரிபுரசுந்தரிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இரட்டைக் குழந்தைகளுக்கு ராமன்-லக்ஷ்மணன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். திரிபுரசுந்தரியின் கனவில் வந்த மீனாட்சி, பிரார்த்தனைப்படி குழந்தையை அர்ப்பணிக்க நினைவூட்டினாள். இரண்டில் எதை தருவது எனக் குழம்பி நின்ற பெற்றோர்களிடம், காலில் சங்கு-சக்கர ரேகை உள்ள குழந்தை, என தெளிவுபடுத்தினாள் மீனாட்சி. மூத்த குழந்தை ராமனுக்கு அந்த அடையாளங்கள் இருந்ததால், அன்னையின் உத்தரவுப்படி, கோவிலில் விட்டு விட்டனர். திகைப்பிலிருந்த அர்ச்சகரை கோவிலை பூட்டிவிட்டு செல்லுமாறு உத்தரவாகியதாம். கோவிலில் ராமனுக்கு ராஜகோபாலன் என்று பெயர் சூட்டினர். காசியிலிருந்த ஸ்ரீ கணபதி பாபாவிடம் சகல சாஸ்திரங்களையும் கற்று, ஸ்ரீ திரிலிங்க ஸ்வாமிகள் எனும் நாமதேயத்துடன் இமயமலையில் பல காலம் இருந்தார். ஸ்ரீ மீனாட்சி அன்னையால் பால் ஊட்டி வளர்க்கப்பட்டதாலும், குழந்தை போன்று முகம் இருந்ததாலும் குழந்தையானந்தா என்ற திருநாமம் கொண்டார். முதல் சமாதி நிலை - காசி க்ஷேத்ரம், இரண்டாம் சமாதி நிலை - பசுபதிநாத் கோவில் - நேபாளம், மூன்றாம் சமாதி நிலை - நெல்லையப்பர் சமாதி, தென்காசி, நான்காம் சமாதி நிலை - அரசரடி, மதுரை. மதுரையிலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள திருப்பாலை எனும் இடத்தில் நியூ யாதவா மென்ஸ் காலேஜ் அருகே ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோவிலும் கோசாலையும் அமைந்துள்ளது. 275 பசுக்களை வைத்து பராமரிக்கின்றனர்.
ஸ்ரீ குழந்தையானந்தா ஸ்வாமிகளின் நான்காவது ஜீவ சமாதி நிலையை இங்கு தரிசிக்கலாம். யோக-பீட-சூக்ஷ்ம மார்க்கமாக பக்தர்களுக்கு இப்போதும் அருள் புரிவதாக ஐதீகம். ஜீவ சமாதி மீது ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளனர். ஸ்வாமிகளுக்கும், ஸ்ரீ சக்கரத்திற்கும் இரு வேளை பூஜைகளும், நைவேத்யங்களும் செய்கின்றனர். இந்த அதிஷ்டானத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானித்தால் மன நிம்மதி கிடைக்கின்றது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், ஸ்வாமிகளின் சூக்ஷ்ம பிரவேச உபதேசங்களும், சுவாஸினி பூஜைகளும் நடைபெறுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.