அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் (மேலமடை)
God Name : பாண்டி முனீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
ஆலயத்தின் பின்னாலுள்ள விநாயகரை முதலில் வணங்கிவிட்டு, பின்னர் பாண்டி அய்யாவை வழிபடச் செல்கின்றனர். பிரதான கருவறையில் மூலவரான பாண்டி முனீஸ்வரர் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். முறுக்கு மீசையும் விரிந்த கண்களும் கொண்டு சாத்வீகமான முகத்துடன் தரிசனம் தருகின்றார். வெள்ளை உடை அணிவித்து, வண்ணப் பூக்களால் மாலை தொடுத்து அணிவிக்கின்றனர். பால் மற்றும் பன்னீரால் அபிஷேகம் செய்து, ஜவ்வாது-அத்தர் பூசி அலங்கரிக்கின்றனர். கிழக்கே ஆண்டிசாமியை தரிசிக்கலாம். அவர் உருவமில்லாமல் அரூபமாக உள்ளார். சமயக் கருப்புவின் சிலை இடம் பெற்றுள்ளது. பாண்டி அய்யா கூறுவதை நிறைவேற்றுபவர் இந்த சமயக் கருப்பு என்கின்றனர். பாண்டி முனீஸ்வரருக்கு சர்க்கரைப் பொங்கலும், ஆண்டி அய்யாவுக்கு வெண் பொங்கலும் படைத்து நைவேத்தியம் செய்கின்றனர். மாம்பழமும் வைத்து பூஜிக்கின்றனர். சுருட்டு நைவேத்தியம் பிடிக்கும். பேய்-பிசாசுகளின் தொந்தரவிலிருந்து காப்பாற்றுபவர் என கூறுகின்றனர். குழந்தை வேண்டுமென பிரார்த்திப்பவர்கள் தூளி அல்லது தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கின்றனர். இது 600 வருடப் பழமையான கோவில் என்று பூசாரி கூறுகிறார். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் கூட்டம் அலை மோதும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.