அருள்மிகு தெப்பக்குள மாரியம்மன் திருக்கோயில் (வண்டியூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
திருமலை நாயக்கர் அரண்மனை கட்ட மணல் வேண்டி தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தைத் தெப்பக்குளமாக மாற்றியுள்ளனர். சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தில் சேர்க்கிறார்கள்.
திருமலை நாயக்கர் மகாலுக்காகத் தோண்டப்பட்ட தெப்பக்குளத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் முக்குறுணி விநாயகர் என்று கூறப்படுகிறது.
வைகையின் வடகரையில், மண்டூக மகரிஷியின் சாபத்தைக் கள்ளழகர் போக்கியதால், மண்டியூர் என அழைக்கப்பட்டு பின்னர் மருவி வண்டியூர் என்றானதாகக் கூறப்படுகிறது.
வடக்கிலிருந்து தெற்காக 1000 அடியும், கிழக்கு மேற்காக 950 அடியும் கொண்ட அழகிய தெப்பக்குளம். கிரானைட் படிக்கட்டுகள் நாற்புறமும் கொண்டுள்ளது. நடுவே அழகிய நீராழி மண்டபம். நீராழி மண்டபத்தைச் சுற்றிலும் தோட்டமும் இருக்கிறது. 1646 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பிரதான வாசல்களுடன் கிழக்கு நோக்கி அமைந்த கோயில். உள்ளே நுழைந்ததும் நாம் காணும் வினைகளைத் தீர்க்கும் விநாயகரை வணங்கி ஆசி பெற்று வலச்சுற்று வரலாம்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ மாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. பாசம் - அங்குசம், அபய - வரத ஹஸ்தங்கள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் காட்சி தரும் சாந்த ஸ்வரூபி. மதுரையின் காவல் தெய்வமாக விளங்குபவள். மேலே வெட்டிவேர் பந்தல் போட்டுள்ளனர். முளைப்பயிறை திருவாசியில் கட்டியுள்ளனர்.
அன்னைக்கு அபிஷேகம் செய்யும் அபிஷேக நீரை, அண்டாக்களில் சேகரித்து வைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள். அம்மை நோயைக் குணப்படுத்தும் அருமருந்து.
பிரகாரச் சுற்றில் வித்தியாசமான கோலத்தில் பேச்சியம்மன் தரிசனம் தருகிறாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.