அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (திருப்பரங்குன்றம்)

God Name : சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரங்கிரிநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

சூரபத்மனை சம்ஹாரம் செய்து முடித்த பிறகு, இத்தலத்தில் வெற்றிவீரராக அமர்ந்திருந்தார் முருகப்பெருமான். தேவேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவரது மகளான தெய்வயானையை திருமணம் செய்துகொண்ட ஸ்தலம். பிரம்மா திருமணம் செய்து வைக்க, சூரிய - சந்திரர்கள் ரத்ன தீபம் தாங்கி நிற்க, இந்திரன் தாரை வார்த்துக் கொடுக்க, பார்வதி - பரமேஸ்வரன் பரமானந்தத்தில் திளைக்க, தெய்வயானை - முருகன் திருமணம் இனிதே நடந்தேறிய ஸ்தலம். இந்த திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளி வாழ்த்தினர். குமரனுடைய திருமணத்திற்காக சிவபெருமான் உமையவளோடு எழுந்தருளி தேவர்களுக்குக் காட்சியளித்த ஸ்தலம். பரமன் எழுந்தருளிய குன்றம் என்பதால் பரங்குன்றம் எனப் பெயர் கொண்டது. குன்று சிவலிங்க வடிவில் இருப்பதால் கிரிவலம் வருகின்றனர். (கிரிவல தூரம் 3 கி.மீ.) சிவபூஜையை மறந்திருந்த நக்கீரர் பூதத்தால் சிறைப்படுத்தப்பட்டு பாதாளத்தில் அடைபட்டுக் கிடந்தார். திருமுருகாற்றுப்படை பாடி, முருகனருள் பெற்று மீண்டார் எனப் புராண வரலாறு. பிரம்மனும், தேவர்களும், முனிவர்களும் வழிபட்ட ஸ்தலம். மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த பெருமான், தாமே சீடராய் இருந்து உபதேசம் கேட்டதாகக் கூறுவர். புரட்டாசி கடைசி வெள்ளியன்று வேலை மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை தீபத்தன்று, பெரிய தாமிரக் கொப்பரை ஒன்றில், 250 கிலோ நெய் மற்றும் 55 கிலோ கற்பூரம் நிரப்பப்பட்டு தீபம் ஏற்றுவார்கள். மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து எரியும். மதுரையின் உயரமான பகுதிகளிலிருந்து தெரியும். பின்னர் பனைமரத்தை நட்டு அதில் பனை ஓலைகளைக் கட்டி, சொக்கப்பானை கொளுத்தும் விழா கொண்டாடி மகிழ்வார்கள். அதில் எரிந்த சாம்பலைப் போட்டால், தங்களது வயலில் அமோக விளைச்சல் என நம்புகின்றனர். அறுபடை வீடுகளுள் ஒன்று (முதல் படைவீடு) - தேவாரத் திருத்தலம்.
மலைக்கு முன்னால் கட்டப்பட்ட குடைவரைக் கோவில். மிகுந்த வேலைப்பாடுகளையும், அழகிய சிற்பங்களையும் தாங்கி நிற்கும் 20 அடி உயரத் தூண்களைக் கொண்ட அழகிய முன் மண்டபம். தெய்வயானையின் திருமணக் காட்சிகள் செதுக்கப்பட்ட தூண்கள். அடுத்துள்ள பெரிய மண்டபம் கடந்து படிக்கட்டுகள் ஏறி மகா மண்டபத்தை அடையலாம். மலையோடு இணைத்துக் கட்டப்பட்ட மண்டபம். அடுத்து அர்த்த மண்டபத்தைக் காணலாம். மூலஸ்தானத்தின் பெரிய பாறையின் நடுவில் மகிஷாசூரமர்த்தினி திருவுருவமும், கீழ்ப் பாகத்தில் மூலவராக முருகப்பெருமானின் கல்யாணக் கோலமும், மேல்பாகத்தில் கற்பக விநாயகரையும் செதுக்கியுள்ளனர். மூலஸ்தானத்து வாயிலை நோக்கியவாறு மூலவரான சுப்ரமண்ய சுவாமி, இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். தெய்வயானை தேவியும் உடன் உள்ளார். அறுபடை வீடுகளில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருவது இங்கு மட்டும்தான். உற்சவராக சண்முகரும் தெய்வயானையும் தரிசனம் தருகின்றனர். திருமணச் சடங்கில் கலந்துகொண்டு வாழ்த்தும் தெய்வங்கள் சூழக் காணப்படும் முருகன், உயரமான மேடை ஒன்றில் தரிசனம் தருகின்றார். யானை - ஆடு ஆகிய வாகனங்கள் காணப்படுகின்றன. மூலவர் சந்நிதியில் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. குடைவரை மூர்த்தி என்பதனால் புனுகு மட்டுமே சாத்துகின்றனர். அருகேயுள்ள சந்நிதியில் திருமால் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். வலப்புறமாக உள்ள குகைச் சுவரில் ஹிரண்ய சம்ஹாரம் மற்றும் வராஹ அவதாரம் பற்றிய சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகரும், விஷ்ணு துர்க்கையும் காட்சி தருகின்றனர். இடதுபுறமாக உள்ள குகையில் அன்னை அன்னபூரணி பரிவாரங்களோடு எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தில் சிவலிங்க வடிவினராக தரிசனம் தருகின்றார் பரங்கிரிநாதர். பின்னால் சோமாஸ்கந்தரின் அழகிய திருவுருவம் காணலாம். அம்பாள் பெயர் ஆவுடைநாயகி. குடைவரைக் கோவில் என்பதனால் பிரகாரம் கிடையாது. வெள்ளை நிற மயிலைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.