அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (திருப்பரங்குன்றம்)
God Name : சுப்ரமண்ய ஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
ஸ்தல வரலாறு. சூரபத்மனை சம்ஹாரம் செய்து முடித்த பிறகு, இத்தலத்தில் வெற்றிவீரராக அமர்ந்திருந்தார் முருகப் பெருமான். தேவேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவரது மகளான தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட ஸ்தலம். பிரம்மா திருமணம் செய்து வைக்க, சூரிய-சந்திரர்கள் ரத்ன தீபம் தாங்கி நிற்க, இந்திரன் தாரை வார்த்துக் கொடுக்க, பார்வதி-பரமேஸ்வரன் பரமானந்தத்தில் திளைக்க, தெய்வயானை-முருகன் திருமணம் இனிதே நடந்தேறிய ஸ்தலம். இந்த திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளி வாழ்த்தினர். குமரனுடைய திருமணத்திற்காக சிவபெருமான் உமையவளோடு எழுந்தருளி தேவர்களுக்கு காட்சியளித்த ஸ்தலம். பரமன் எழுந்தருளிய குன்றம் என்பதால் பரங்குன்றம் எனப் பெயர் கொண்டது. குன்று சிவலிங்க வடிவில் இருப்பதால் கிரிவலம் வருகின்றனர். (கிரிவல தூரம் 3 கி.மீ.) சிவபூஜையை மறந்திருந்த நக்கீரர் பூதத்தால் சிறைபடுத்தப்பட்டு பாதாளத்தில் அடைபட்டுக் கிடந்தார். திருமுருகாற்றுப்படை பாடி, முருகனருள் பெற்று மீண்டார் எனப் புராண வரலாறு. பிரம்மனும், தேவர்களும், முனிவர்களும் வழிபட்ட ஸ்தலம். மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த பெருமான், தாமே சீடராய் இருந்து உபதேசம் கேட்டதாகக் கூறுவர். சித்திரை விழா (ஏப்ரல்), வைகாசி விசாக விழா (ஜூன்), ஆனி ஊஞ்சல் மற்றும் ஆனி முப்பழ விழா (ஜூலை), ஆடி பூரம் (ஜூலை-ஆகஸ்ட்), ஸ்கந்த சஷ்டி (அக்டோபர் - நவம்பர்), திரு கார்த்திகை (நவம்பர்-டிசம்பர்), ஆருத்ரா, தெப்போத்ஸவம், தை பூசம் (ஜனவரி-பிப்ரவரி), பங்குனி பெரு விழா (மார்ச்-ஏப்ரல்). புரட்டாசி கடைசி வெள்ளியன்று, வேலை மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்வார்கள். தைப்பூசத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கார்த்திகை தீபத்தன்று, பெரிய தாமிரக் கொப்பரை ஒன்றில், 250 கிலோ நெய் மற்றும் 55 கிலோ கற்பூரம் நிரப்பப்பட்டு தீபம் ஏற்றுவார்கள். மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து எரியும். மதுரையின் உயரமான பகுதிகளிலிருந்து தெரியும். பின்னர் பனைமரத்தை நட்டு, அதில் பனை ஓலைகளைக் கட்டி, சொக்கப்பானை கொளுத்தும் விழா கொண்டாடுவார்கள். அதில் எரிந்த சாம்பலைப் போட்டால், தங்களது வயலில் அமோக விளைச்சல் என நம்புகின்றனர்.
மலைக்கு முன்னால் கட்டப்பட்ட குடைவரைக் கோவில். மிகுந்த வேலைப்பாடுகளையும், அழகிய சிற்பங்களையும் தாங்கி நிற்கும் 20 அடி உயரத் தூண்களைக் கொண்ட அழகிய முன் மண்டபம். தெய்வயானையின் திருமணக் காட்சிகள் செதுக்கப்பட்ட தூண்கள். அடுத்துள்ள பெரிய மண்டபத்தைக் கடந்து, படிக்கட்டுகள் ஏறி மகா மண்டபத்தை அடையலாம். இது மலையோடு இணைத்துக் கட்டப்பட்ட மண்டபம். அடுத்து அர்த்த மண்டபத்தைக் காணலாம். கருவறையின் பெரிய பாறையின் மத்தியில் மகிஷாசூரமர்த்தினி திருவுருவமும், கீழ்ப்பாகத்தில் மூலவராக முருகப் பெருமானின் கல்யாணக் கோலமும், மேற் பாகத்தில் கற்பக விநாயகரும் செதுக்கப்பட்டுள்ளனர். கருவறையில், வாயிலை நோக்கியவாறு மூலவரான சுப்ரமண்ய ஸ்வாமி, இடது கால் மடித்து வலது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். தெய்வயானை தேவியும் உடன் உள்ளார். அறுபடை வீடுகளில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருவது இங்கு மட்டும்தான். யானை, ஆடு ஆகிய வாகனங்கள். திருமணச் சடங்கினில் கலந்துகொண்டு வாழ்த்தும் தெய்வங்கள் சூழக் காணப்படும் முருகன், உயரமான மேடை ஒன்றில் தரிசனம் தருகின்றார். மூலவர் சந்நிதியில் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. குடைவரை மூர்த்தி என்பதனால் புனுகு சாத்துகின்றனர். உற்சவராக ஷண்முகரும் தெய்வயானையும் தரிசனம் தருகின்றனர். அருகேயுள்ள சந்நிதியில் திருமால் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். வலப்புறமாக உள்ள குகைச் சுவரில் ஹிரண்ய சம்ஹாரம் மற்றும் வராஹ அவதாரம் பற்றிய சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகரும், விஷ்ணு துர்க்கையும் காட்சி தருகின்றனர். இடதுபுறமாக உள்ள குகையில் அன்னை அன்னபூரணி பரிவாரங்களோடு எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தில் சிவலிங்க வடிவினராக பரங்கிரிநாதர் தரிசனம் தருகின்றார். பின்னால் சோமாஸ்கந்தரின் அழகிய திருவுருவத்தைக் காணலாம். அம்பாள் பெயர் ஆவுடைநாயகி. குடைவரைக் கோவில் என்பதனால் பிரகாரம் கிடையாது. வெள்ளை நிற மயிலைக் காணலாம். தேவாரத் திருத்தலம். அறுபடை வீடுகளுள் ஒன்று - முதல் படைவீடு.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.