அருள்மிகு கோச்சடையான் திருக்கோவில் (மதுரை)
God Name : வில்லாயுதம் உடைய அய்யனார்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
'ஜடாதாரி' என்பதன் தமிழ்ச் சொல்லே 'கோச்சடை'. ஆகவே இது சிவபெருமானைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். 'சடை உடைய அரசன்' என்றும் வைத்துக்கொள்ளலாம். (கூன் பாண்டியனின் மகனது பெயர் சடையவர்மன்) கூலியாளாக வந்த சிவபெருமானை, பாண்டிய மன்னன் கோவிச்சு அடித்ததால் 'கோவிச்சு அடி' எனப் பெயர்பெற்று 'கோச்சடை' என்றானதாகக் கூறப்படுவதுண்டு.
பிரதான கருவறையில் மூலவராக அய்யனார் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இவரை வில்லாயுதம் உடைய அய்யனார் என்பர். கிழக்கு பார்த்த சந்நிதி. பூரணி - புஷ்கலா தேவியர்கள் உடன் உள்ளனர். நுழைவாசலில் வில்லாயுதமுடைய அய்யனாரும், முத்தைய்யாவும் குதிரை மீதமர்ந்தபடி காட்சி தருகின்றனர். பஞ்ச பூதங்கள் காணப்படுகின்றன. ஆதியில் இங்கிருந்தவர் அய்யனார்தான். ஊரைக் காபந்து செய்ய வந்த முத்தையா இங்குள்ள அய்யனாரிடம் அடைக்கலம் புகுந்தார். நாளடைவில் முத்தையா பிரபலமாகி, முத்தையா கோவில் எனக் கூப்பிடும் அளவுக்கு பிரபலமாகி விட்டார். இங்குள்ள கோச்சடை பூதத்தின் சிலையைப் போன்ற பெரிய அளவு சிலை வேறெங்கும் பார்க்க முடியாது. ஸ்ரீ கருப்பசாமி, அக்னிவீரபத்ரர், நாகப்பசுவாமி, சங்கிலி கருப்பர், கலுவடி கருப்பு, சன்னாசி, ஆதிபூசாரி, இருளப்பசுவாமி, வீரணன், சப்பாணி, சோனை, முனியாண்டி, முத்துகருப்பசாமி, பத்ரகாளி, ராக்காயி, கருப்பாணி, பேச்சாயி ஆகிய பரிவார தேவதைகள் இடம் பெற்றுள்ளனர். ஸ்தல விருட்சமான புளியமரத்தடியில் உள்ள புற்றில் நாகம்மன் கோவில் கொண்டுள்ளார். இந்த மரத்தடியில் பதஞ்சலி முனிவர் தவமிருந்ததாக கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.