அருள்மிகு பேச்சி அம்மன் திருக்கோவில் (மதுரை)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
மகாவீரனாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என பிரம்மாவை வேண்டி நின்றான் வல்லாளன் எனும் அரசன். பிரம்மாவும் வரம் தந்தருளினார். பிறக்கப்போகும் பிள்ளையால் தேவலோகத்திற்கு ஆபத்து வரும் என பயந்த தேவர்கள், சரஸ்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர். உடனே சரஸ்வதி வல்லாளனையும் அவனது மனைவியையும் சம்ஹாரம் செய்தாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் சரஸ்வதியின் உருவமும் முகமும் மாறியது. அதே கோலத்தில் இங்கு பேச்சியம்மனாக எழுந்தருளி அருள்பாலிக்கிறாள் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
பிரதான கருவறையில் மூலவராக ஸ்ரீ பேச்சியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சுயம்பு வடிவினள். ஸ்ரீ சங்கு விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை மற்றும் ஸ்ரீ ஐயனார் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். விசேஷ மூர்த்தமான ஸ்ரீ நாகம்மாளுக்குப் பால் அபிஷேகம் செய்தால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பேச்சியம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகு கால வேளைகளில் செய்யப்படும் பாலபிஷேகம் மற்றும் மாலை வேளையில் செய்யப்படும் குங்குமக் காப்பைக் காண பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.