அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் (ஸ்ரீரங்கப்பட்டணம்)
God Name : மூலவர்: ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி் உற்சவர்: ஸ்ரீ கஸ்தூரி ரங்கன்
திருக்கழுக்குன்றம் கோவில்
புதுக்கோட்டை
Call : +91-
மைசூர் - பெங்களூரு மார்க்கத்தில், ஒன்பதாவது மைலில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து, பின்னர் மூன்று மைல் தள்ளி இரண்டும் ஒன்று சேர்கின்றன. இதன் நடுவே அமைந்துள்ள தீவு ஸ்ரீரங்கப்பட்டணம்.
இதை 'ஆதிரங்கம்' எனக் கூறுகிறது காவேரி மகாத்மியம். பிரம்மாண்ட புராணமோ இதை 'பச்சிம ரங்கம்' என்கிறது. பச்சிம வாஹினி எனும் தீர்த்தக் கட்டத்திலிருந்து காவிரி இரண்டாகப் பிரியும் இவ்விடத்தை 'கௌதம க்ஷேத்ரம்' என்றும் குறிப்பிடுவர். இங்கு கௌதமரின் குகை ஒன்று இருந்ததாகவும், இங்கிருந்துகொண்டே ஸ்ரீ ரங்கநாதரை நித்ய ஆராதனை செய்து வந்தார் கௌதமர்.
காவேரி அன்னைக்கு பிரத்யட்சமான பெருமாள், அவளது வேண்டுகோளின்படி இங்கு பள்ளி கொண்ட கோலம் கொண்டதாக ஸ்தல வரலாறு தெரிவிக்கின்றது.
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டுள்ளனர் என்றும், பல நன்கொடைகளை அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
பஞ்ச ரங்க க்ஷேத்ரங்களுள் ஒன்று - ஆதி ரங்கம்.
மூலவர்: ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி் உற்சவர்: ஸ்ரீ கஸ்தூரி ரங்கன்் தாயார்: ஸ்ரீ ரங்கநாயகி.
மூலஸ்தானத்தில், ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாளாக, கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு, யோக சயனத்தில் சயனித்துள்ளார். வலக்கையின் மீது திருமுகம் படிந்திருக்க, மார்பில் மஹாலட்சுமி துலங்க, திருவடிகள் அருகே காவேரி அமர்ந்திருக்க, அற்புதமான தரிசனம் கிடைக்கின்றது. சற்றுத் தள்ளி கௌதம முனிவர் காணப்படுகிறார். கௌதம ரிஷிக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.
மூலவர்க்கு முன்பாக, உற்சவ மூர்த்தி ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
மூலஸ்தானம் செல்லும் வழியில், சதுர்விம்சதி எனும் இரண்டு தூண்களில் விஷ்ணு மூர்த்தியின் இருபத்திநான்கு வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் அழகு திருவுருவமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். அலமேலுமங்கையின் மூக்குத்தியை அணிந்திருப்பதாக குறிப்பொன்று கூறுகிறது.
உட்பிரகாரத்தில் ஆழ்வாராதிகள், கருடன் மற்றும் ராஜ மன்னார் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீ பட்டாபிராமரின் திருவடிகளருகே ஆஞ்சநேயர் கையில் ராமாயண புத்தகம் வைத்துக் கொண்டு இருப்பது பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், சுதர்ஸனர், கஜேந்திர வரதர், வேணு கோபாலன் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
வடக்கு பிரகாரத்திலிருந்து பார்த்தால் தெரியும் ப்ரும்மானந்த விமானத்தை சேவிக்கலாம். தெற்கு பிரகாரத்தில் சந்தான பாக்யம் அளிக்கும் கண்ணனை சேவிக்கலாம்.
வெளி பிரகாரத்தில் வியாஸராஜர் பிரதிஷ்டை செய்து ஆராதித்த ஸ்ரீநிவாசரையும், ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.