அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில், கும்பகோணம்
God Name : மூலவர்: ஆராவமுதன்் உற்சவர்: சாரங்கபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ஹேம ரிஷியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, திருமால் வைகுந்தத்திலிருந்து சார்ங்கத்தை கையில் எடுத்துக்கொண்டு பூலோகம் வந்ததாக ஐதீகம். ஹேம ரிஷியின் புத்ரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஸ்தல வரலாறு.
ஹேம புஷ்கரிணி எனப்படும் பொற்றாமரைக் குளக்கரையில் ஹேம ரிஷிக்கு ஒரு சந்நிதி உள்ளது.
சார்ங்க வில்லுடன் சேவை சாதிப்பதால் சாரங்கபாணி எனும் திருநாமம் கொண்டார்.
திருமழிசை ஆழ்வார் ஆராவமுதனை சேவிக்க இத்தலத்திற்கு வந்தபோது, பெருமாள் அசையாது உறங்குவது கண்டு, வராஹ மூர்த்தியாய் அசுரனை வதைத்து பூமியை மீட்டுக் கொண்டு வந்த ஆயாசத்தில் இப்படி அசையாது படுத்து உறங்குகிறாரோ என்று வினவுகிறார். "நீங்கள் படுத்துறங்கும் காரணத்தை, படுத்திருந்தபடியே எனக்கு விளக்க வேண்டும்" என விண்ணப்பித்தார்.
"நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ? விலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு" எனப் பாடினார்.
இந்த விண்ணப்பத்தைக் கேட்ட பெருமாள் எழுந்திருந்து பேச முயல, ஆழ்வாரும் பெருமாளின் அதிசௌலப்யத்திற்கு ஒரு குறையும் நேராதபடி "வாழிகேசனே" என மங்களாசாஸனம் செய்தார்.
அன்று முதல் திருமழிசையாழ்வாருக்கு பதில் கூற கிடந்தவாறு எழுந்திருந்த அதே கோலத்தில் சேவார்த்திகளுக்கும் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
வீரநாராயணப் பெருமாளை சேவிக்க காட்டுமன்னார் கோவில் போன யாத்ரிகர்களில் ஒருவர், பெருமாள் சந்நிதியில் "ஆராவமுதே" எனத் தொடங்கும் திருக்குடந்தைப் பதிகத்தை பாடத் தொடங்கி, "ஆயிரத்துள் இப்பத்தும்" என முடித்தார். அந்த பதிகத்தின் கருத்தில் மெய் மறந்த நாதமுனிகள் மீதி பாடல்களைத் தேட ஆழ்வார் திரு நகரி சென்று மதுரகவி ஆழ்வாரின் தொடர்பு பெற்றிருந்த பராங்குசதாசர் என்பவரின் உதவியுடன் பாடல்களை சேகரித்து தொகுக்கிறார். எனவே (நாலாயிரம் பாடல்கள்) நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தொகுக்க காரணமாயிருந்தது திருக்குடந்தை பதிகமே எனக் கூறப்படுகிறது.
பெருமாளுக்கு நைவேத்தியமாக கும்மாயம் படைக்கின்றனர். மொச்சை, பாசிப்பயறு, உளுந்து, துவரை, கொள்ளு ஆகியவற்றை குறுநொய் போல் உடைத்து வேகவைத்து, வெல்லம், பசுநெய் சேர்த்து செய்வதே கும்மாயம் எனப்படும்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச ரங்க க்ஷேத்ரங்களுள் ஒன்று.
மூலவர்: ஆராவமுதன்் உற்சவர்: சாரங்கபாணி் தாயார்: கோமளவல்லி.
மூலஸ்தானமும் முன் மண்டபங்களும் ரதம் போல் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நாற்புறங்களிலும் நான்கு சக்கரங்கள் இருக்கின்றன. குதிரைகளும், யானைகளும் ரதத்தை இழுத்துச் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமலை போலுள்ளதால் படிக்கட்டுக்கள் ஏறிச் செல்ல வேண்டும்.
உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசலும் (6 மாதம்), ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசலும் (6 மாதம்) திறந்திருக்கும்.
கோமளவல்லியை மணக்க சாரங்கபாணி தேரில் வந்ததால், சந்நிதியையும் தேர் போன்று அமைத்துள்ளனர்.
மூலஸ்தானத்தில் மூலவர் ஆராவமுதப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, பாம்பணை மீது உத்தான சயனத்தில் அதாவது கிடந்தவாறு எழுந்திருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இதை உத்தியோக சயனம் என்றும் கூறுவர். ஹேம மகரிஷிக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.
ஆடி மாதம் ஜேஷ்டாபிஷேக ஏகாதசியில் மூலவருக்கு எண்ணைக்காப்பு சாத்தினால் 45 நாட்கள் வரை களைவதில்லை. தீபாவளியன்று மூலவருக்கு புனுகு சாத்துப்படி நடக்கும்.
சார்ங்க வில்லுடன் சேவை சாதிக்கும் உற்சவர் சாரங்கபாணி கண்களையும் மனதையும் விட்டகலாத எழில் திருமேனி.
தாயார் கோமளவல்லி எனப்படும் பொற்றாமரையாள் தனிக் கோவில் நாச்சியாராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். 'படித்தாண்டா பத்தினி' என்பார்கள். காணும் பொங்கலன்று மட்டும் உட் பிரகாரம் வழியே பொற்றாமரைக் குளம் சென்று சுமங்கலிகளுடன் சேர்ந்து கணு வைக்கும் விழாவில் கலந்து கொள்வார்.
கோமளவல்லித் தாயாரின் அவதார ஸ்தலம் என்பதால் தாயாரை முதலில் சேவித்துவிட்டு பின்னர் பெருமாளை சேவிப்பது இங்குள்ள நடைமுறை என்பர்.
தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளியுள்ள பாதாள சீனிவாசன், ராஜகோபாலன், ஸ்ரீராமன், கண்ணன், தீரா வினை தீர்த்த பெருமாள் ஆகியோரை சேவிக்கலாம்.
பெருமாள் வைகுந்தத்திலிருந்து நேரே இங்கு ரதத்தில் வந்து தாயாரை மணந்துகொண்டதால் இத்தலத்தை பூலோக நித்ய வைகுண்டம் எனப் போற்றுவார்கள். ஆதலால் இங்கு சொர்க்கவாசல் தனியாக கிடையாது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.