அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோவில், மதுரை
God Name : ஜலகண்டேஸ்வரர் என்று அழைக்கப்படும் சுந்தரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
மீனாட்சியின் வளர்ப்பு அன்னையான காஞ்சனமாலை, ஜீவன் முக்தியடையும் வழியைப் பற்றியும், தவ வலிமைகளைப் பற்றியும் விவரிக்குமாறு கௌதம முனிவரை வேண்டினாள். வேத பாராயணங்கள் செய்தல், சிவனை வழிபடுதல், தான - தர்மங்கள் செய்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறும், புனித நதிகள் பலவும் கலக்கும் கடலில் ஸ்நானம் செய்து தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளுமாறும் கௌதம முனிவர் உபதேசித்தார்.
சமுத்திரமே இல்லாத மதுரையில் எப்படி கடல் ஸ்நானம் செய்வது என யோசித்த காஞ்சனமாலை, மகள் மீனாட்சியிடம் கூறி, "உன் கணவனால் முடியாதது ஏதுமில்லை" என கெஞ்சினாள். மீனாட்சியின் மூலமாக விஷயங்களை அறிந்த பரமன், மதுரையின் கிழக்கே உள்ள ஒரு குளத்தில் ஏழு கடல் நீரையும் வரவழைத்தார். இதனால் 'ஏழு கடல் தெரு' என்ற பெயரும் வந்தது.
கடல் ஸ்நானம் மற்றும் தீர்த்த யாத்திரைகள் செய்ய கணவனுடன் செல்ல வேண்டும். ஆனால் இவளது கணவனான மலையத்துவஜ பாண்டியன் உயிரோடு இல்லை. வேறு வழியின்றி ஒரு பசுவின் கன்றின் வாலைப் பிடித்துக் கொண்டு நீராடும் நிலைக்கு தள்ளப்பட்டதால் நொந்து போன காஞ்சனமாலை மீண்டும் மீனாட்சியிடம் கோரிக்கை வைத்தாள்.
இறைவனின் கட்டளைப்படி, மலையத்துவஜ பாண்டியனை இந்திரன் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தான். சிவனடியார்கள் வழிகாட்ட, முறைப்படி தீர்த்த யாத்திரை செய்ய கணவனுடன் ஏழு கடல் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தாள். பின்னர் இருவரும் தெய்வ வடிவம் பெற்று விண்ணுலகம் சென்றனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிரதான கருவறையில் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அவரை தரிசிக்கும் கோலத்தில் காஞ்சனமாலை அம்மனின் திருவுருவம் காணப்படுகிறது. இங்குள்ள வண்ணச் சுதை சிற்பங்கள் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.