அருள்மிகு மாகாளீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

God Name : மாகாளீஸ்வரர்

Call : +91-

சிவபெருமானின் திருமேனியை அலங்கரித்து வந்த காளன் என்னும் நாகம், பொறுப்புகளை மறந்து தன் இச்சையாக இருந்ததால் கோபம் கொண்ட சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியும், பரிகாரம் வேண்டியும், காளஹஸ்தி சென்று இறைவனை வழிபட்டு வந்தது. பின்னர் முக்தி பெற்று சிவலோகம் சென்றடைந்தது என காளத்தி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ராகு பகவானும், கேது பகவானும் தனித்தனி லிங்கங்கள் அமைத்து வழிபட்டு கிரக பதவி பெற்றதாக வரலாறு. கருவறையின் இடப்புறம் சிலந்தியும், பாம்பும் சுவாமியை பூஜை செய்த இடம் என்று சொல்கின்றனர். நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் உள்ளவர்கள், இவ்விறைவனை வழிபட்டால் தோஷங்களிலிருந்து விடுபடலாம். ராஹு பகவானும் கேது பகவானும் லிங்கத் திருவுருவங்களாக இருப்பதால் இத்தலம் ஒரு நாகதோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
மூலவர்: மாகாளீஸ்வரர். உற்சவ மூர்த்தி அம்பாள்: மாகாளீஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மாகாளீஸ்வரர். மேற்கு பார்த்த ஆவுடையாருடன் வடக்கு நோக்கிய லிங்கத் திருமேனி கொண்டு காட்சி தரும் அழகிய லிங்கம். பின்புற சுவரில் சோமாஸ்கந்த மூர்த்தி தரிசனம் தருகின்றார். அம்பாளின் உற்சவ மூர்த்தி மிகவும் அழகாக இருக்கின்றது. தாரா தேவி சஹித குரு பகவான், உஷா - சாயா சஹித சூரிய பகவான், சுபகீர்த்தி சஹித சுக்கிரன், மாலினி சஹித செவ்வாய், இளையாதேவி சஹித புதன், நீலா தேவி சஹித சனி, சுவாதி - ரேவதி சஹித சந்திரன், சரஸ்வதி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். கல்யாண துர்க்கை இத்தலத்தில் விசேஷம். லிங்கத் திருவுருவாக ராஹுவும், லிங்கத் திருவுருவாக கேதுவும் எழுந்தருளியுள்ளனர். விநாயகப் பெருமானும், வள்ளி-தேவசேனா சமேத முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். அரசம்/வேம்பும் இணைந்த விருட்ச மேடையில் நாகப்பிரதிஷ்டைகள் காணப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.