அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் (பாகசாலை எனப்படும் பாகை)
God Name : பாலசுப்ரமண்யர்
Call : +91-
இலுப்பைக்காடாக இருந்த இப்பிரதேசம், அமைதியாக இருந்தபடியால், முனிவர்கள் பலர் இங்கு தங்கி, யாகங்கள் பல நடத்தினமையால், இவ்வூர் யாகசாலை எனப் பெயர் கொண்டு பின்னர் காலப்போக்கில் பாகசாலை என மருவியது.
நாரதர் கொண்டு வந்த மாங்கனியைப் பெற, உலகை வலம் வர வேண்டி, முருகன் புறப்படுகையில், மந்திர சக்தியே மயில் உருவமெடுத்து வந்தது. அந்த மந்திர மயிலை வாகனமாகக் கொண்டுள்ள ஒரே ஸ்தலம் இது.
(சூரபத்மனுடன் போர் புரிகையில், இந்திரனே மயில் வடிவம் கொண்டு, வாகனமாக வந்து தாங்கிக் கொண்டதை - இந்திர மயில் என்பர். போரில் சூரபத்மனை வென்று - அவனைப் பிளந்து, மயிலாகவும், சேவலாகவும் ஏற்றுக் கொண்டார். இதனைச் சூரமயில் என்பர்.)
அனுக்ஞை ஸ்ரீ கற்பக விநாயகரிடம் ஆசி பெற்று வலச்சுற்றைத் தொடங்கலாம்.
மூலஸ்தானத்தில் பாலசுப்ரமண்யர் பிரம்ம சாஸ்தா வடிவில் தரிசனம் தருகின்றார். சதுர்புஜங்களுடன் கூடிய, நெடிதுயர்ந்த, அழகிய திருமேனி. சக்தி வேல் தாங்கியும், மந்திர மயில் கொண்டும் வேத மந்திர ஸ்வரூபனாகக் காட்சி தருகின்றார்.
"சுட்ட பழம் வேணுமா? - சுடாத பழம் வேணுமா?" என அவ்வையாரிடம் முருகன் கேட்பது போன்ற சிற்பம், ஸ்வாமிநாதனாகத் தோன்றி தந்தைக்கு உபதேசம் செய்யும் காட்சியை விளக்கும் சிற்பம் ஆகியன சுதைச் சிற்பங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ திருவுடை நாயகி சமேத ஸ்ரீ திருமூலநாதசுவாமி கோவில் ஒன்றும் இவ்வூரிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.