அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை

God Name : மூலவர்: கூடலழகர், உற்சவர்: வ்யூக சுந்தர்ராஜன்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

கூடல் எனும் மதுரையை ஆண்ட வல்லபதேவன் எனும் அரசன், ஒரு நாள் இரவு நகர் சோதனையில் வலம் வந்தபோது, ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வடநாட்டு யாத்ரிகன் ஒருவனை எழுப்பி யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டு, யாத்ரிகனை ஏதாவது நீதி ஒன்றை கூறுமாறு பணித்தான். யாத்ரிகன் கூறிய ஸ்லோகத்தின் பொருளாவது - மழைக்காலத்திற்கு வேண்டியதை மற்ற எட்டு மாதங்களிலும், இரவிற்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக என்பதாகும். கடைசியாக சொன்ன மறுமையின்பத்தைப் பற்றி சிந்தித்த அரசன், தான் ஒரு முயற்சியையும் எடுக்காததை நினைத்து கவலைப்பட ஆரம்பித்தான். இது சம்பந்தமாக அரசனுக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அவற்றை தீர்த்து வைப்பவர்க்கு பொற்கிழி வழங்கப்படும் என அறிவித்தான். பொற்கிழியை ஊரறிய ஓர் கம்பத்தில் கட்டி வைத்தான். ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த விஷ்ணுசித்தர் என்பவர், வல்லப தேவனின் சபையிலுள்ள புலவர்களை தனது வாதத் திறமையால் வென்றார். இதிகாசம், புராணம், ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்ச காரணமானவன் என்றும் அவனை சரண் அடைவதே சகல விருப்பங்களையும் அடையும் உபாயம் என்றும் ஸ்ரீமந்நாராயணனே பிரபஞ்ச காரணமான பரமாத்மாவென்றும் முக்திக்கு வழி காட்ட வல்ல பரம்பொருள் எனும் கருத்தின் மூலமாக மன்னனின் சந்தேகத்தைப் போக்கினார். கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாகவே தாழ வளைந்தது. அதைப் பெற்றுக் கொண்டார் விஷ்ணுசித்தன். தன்னுடைய சந்தேகங்களுக்கு பொருத்தமான விளக்கங்களை அளித்த விஷ்ணுசித்தனுக்கு பட்டர்பிரான் (அறிஞர்களின் தலைவர்) எனும் சிறப்பு பெயரினை வழங்கி கௌரவித்தான் அரசன். விஷ்ணுசித்தனை யானை மீது ஏற்றி ஊர்வலமாக வரச் செய்தான் அரசன். விஷ்ணுசித்தன் பட்டர்பிரானாக வலம் வருவதைக் காண பெருமாளே பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து வான் வெளியில் காட்சி தந்தார். இதை கண்ணுற்ற விஷ்ணுசித்தர், பெருமாளின் சௌந்தர்யத்தில் மயங்கி பல்லாண்டு பாடத் தொடங்கி விட்டார். எம்பெருமானிடம், அவனுக்கே நன்மைகள் வேண்டி ஆழ்வார் பாடிய பிரபந்தமே திருப்பல்லாண்டு எனப்படும். பல்லாண்டு, பல்லாண்டு என்று சொல்லி பெருமாளின் நன்மையை வேண்டி காப்பிட்டிருப்பதினால் இதற்கு திருப்பல்லாண்டு என பெயர் வந்தது. தமக்கு ஒரு நன்மையையும் வேண்டி பிரார்த்திக்காமல் இறைவனுக்கே காப்பிடுகிறார். உன்னுடைய சௌந்தர்யம், மேன்மை ஆகியனவற்றிற்கு ஏதேனும் தீமை ஏற்பட்டு விடுமோ? என பல்லாண்டு பாடுகிறார். பரம்பொருள் முன்னே தோன்றினால் யாராயிருந்தாலும், தமக்கு ஏற்படும் தீமைகள் விலக வேண்டுமென்றோ தமக்கு பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றோ பிரார்த்திப்பார்கள். நம்மை காக்கும் சர்வரட்சகனுக்கே அவனது சௌந்தர்யத்திற்கு தீங்கு நேரக்கூடாது என காப்பிட்டு பாடுகிறார் விஷ்ணுசித்தர். தன்னுடைய மங்களாசாசனத்தால் பெருமாளைக் காக்க வேண்டும் என்ற பிரேமையை வெளிப்படுத்தியதால் இவரை பெரியாழ்வார் என்று போற்றுகின்றனர். எம்பெருமானின் பேரழகை வர்ணித்து அப்போது பாடிய பாடலான பல்லாண்டு இன்றும் பூவுலகம் முழுவதும் ஒலிக்கின்றது. எம்பெருமானையும், மார்பில் வாசம் செய்யும் லக்ஷ்மியையும், சங்கு - சக்கரம் ஆகிய படைகளையும் போற்றிப் பாடிய திருப்பல்லாண்டு பிறந்த ஸ்தலம். பெருமாளின் பேரழகை கண்டு வியந்த திருமங்கை ஆழ்வார் ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ, ஒருவர் அழகியவா என முடியும் பாசுரத்தை பாடுகிறார். வருணன் இத்தலத்தை பேரலையால் தாக்கி அழிக்க முற்பட்டபோது, சிவபெருமானின் சடையிலிருந்து விடுபட்ட நான்கு மேகங்கள் மலை போல உயர்ந்து, நான்கு மாடங்களாக கூடி நின்று மதுரையை காத்ததால் நான்மாடக்கூடல் என்றும் கூடல் நகர் என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்தி வைக்க வந்த எம்பெருமான், இத்தலத்திலேயே கோவில் கொண்டதாக புராணக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மூலவர்: கூடலழகர், உற்சவர்: வியூக சுந்தர்ராஜன், தாயார்: மதுரவல்லித் தாயார். மூலஸ்தானத்தில் மூலவராக கூடலழகர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. இடது கரத்தால் அழைத்து வலது கரத்தினால் வரம் அருளுவதால் ஆஹ்வயவரதர் என்றொரு திருநாமமும் உண்டு. மூலவர்க்கு முன்பாக காணப்படும் வியூக சுந்தர்ராஜன் உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். நான்கடி உயரம் கொண்ட பஞ்சலோகத் திருமேனி. கௌதுகர், வியூக சுந்தர்ராஜன், ஸ்நான பேரர், பலி பேரர், மூலவர் ஆகிய பஞ்ச மூர்த்தங்களை சேவிக்கலாம். மதுரவல்லித் தாயார் தனிக் கோவில் கொண்டுள்ளார். இவருக்கு வகுளவல்லி, மதுரவல்லி, மரகதவல்லி, வரகுணவல்லி ஆகிய திருநாமங்கள் இருக்கின்றன. மூலவர் சந்நிதிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், ஆண்டாள் மற்றும் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம். நவகிரகங்கள் இங்கு விசேஷமாக உள்ளன. இரண்டாம் தளத்தில் சூரிய நாராயணர் நின்ற திருக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். தேவியர்கள் உடன் உள்ளனர். சுற்றிலும் அஷ்டதிக் பாலகர்கள் தரிசனம் தருகின்றனர். மூன்றாம் தளத்தில் பள்ளிக் கொண்ட பெருமாளாக அந்தர வானத்து எம்பிரான் என போற்றப்படும் ரங்கநாதர் தரிசனம் தருகின்றார். ஓம் நமோ நாராயணா எனும் அஷ்டாக்ஷர மந்திரத்தை பிரதிபலிக்கும் எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க விமானம் (அதிஷ்டானம், பாதம், பாதம், பாதம், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி) தேவ சிற்பி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்பர். ராஜ கோபுரத்தில் காணப்படும் ராமாயண - மஹாபாரத சிற்பங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.