அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் (மதுரை)

God Name : நன்மை தருவார்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

மதுரையை ஆண்டு கொண்டிருந்த மீனாட்சி, சுந்தரேஸ்வரரை மணம் புரிந்து கொண்டதால், ஆட்சி பொறுப்பில் பங்கு தருகிறார். எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆள வேண்டும் என்றும் (அதாவது ஆவணி முதல் பங்குனி வரை) நான்கு மாதங்கள் மீனாட்சி தேவி ஆள வேண்டும் என்றும் (அதாவது சித்திரை முதல் ஆடி வரை) முடிவு செய்யப்பட்டது. செங்கோலை பிடிப்பதற்கு முன்பாக சிவபூஜை செய்வது ஐதீகம். ஆளப் போவது சிவபெருமானே ஆனாலும், ஐதீகத்தை பின்பற்ற வேண்டி தனது ஆத்மாவையே லிங்கமாக பிரதிஷ்டை செய்து அதன் முன் அமர்ந்து சிவபூஜை செய்கின்றார். இதனால் பக்தர்களுக்கு லிங்கத்தின் பின்புற தரிசனமே கிடைப்பதாக கூறப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற லீலை அரங்கேறிய ஸ்தலம். சோமசுந்தரக் கடவுள் தமது திவ்ய மேனியை மறைத்து, வளையல் விற்கும் செட்டி வேடம் புனைந்து "வளையலோ..வளையல்" எனக் கூவி, பெண்களுக்கு வளையல்களை விற்றுவிட்டு, காசு கூட பெற்றுக் கொள்ளாமல், இக்கோவிலுக்குள் புகுந்து சிவலிங்க வடிவம் கொண்டதாக வரலாறு.
மூலவர்: நன்மை தருவார், அம்பாள்: மத்யபுரி அம்மன். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நன்மை தருவார். மேற்கு பார்த்த சந்நிதி. சிவலிங்கத் திருமேனியின் பின்புறமாக சோமசுந்தரர் - மீனாட்சி கல்யாணக் கோலத்தை தரிசிக்கலாம். சிவனும் பார்வதியும் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்வதால் லிங்கத்தின் முன் பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு லிங்கத்தின் பின்புற பகுதியின் தரிசனம் கிடைக்கின்றது. மத்யபுரி அம்மன் எனப்படும் நடுவூர் நாயகி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். அம்பாள் சந்நிதியில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சித்தி விநாயகர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சந்நிதி கொண்டுள்ளனர். தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள கால பைரவர் விசேஷமானவர். ஒரு பங்கு அரிசி, மூன்று பங்கு மிளகாய் சேர்த்து கார புளியோதரை செய்து இவருக்கு நைவேத்யம் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.