அருள்மிகு மதன கோபாலஸ்வாமி திருக்கோவில் (மதுரை)
God Name : மூலவர்: மதன வேணு கோபால சுவாமி, உற்சவர்: மதன கோபாலர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
தனது அழகினால் கர்வம் கொண்ட மன்மதன், இந்தக் கண்ணனைக் கண்டதும், இந்த அழகிற்கு முன் தன்னுடைய அழகு ஒன்றுமேயில்லை என உணர்ந்து, கர்வம் அழிந்து, வழிபட்டதாக வரலாறு.
மூலவர்: மதன வேணு கோபால சுவாமி, உற்சவர்: மதன கோபாலர், தாயார்: மதன மதுரவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ மதன வேணு கோபால சுவாமி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சங்கு - சக்கரம் ஏந்திய பின்கரங்களுடனும், புல்லாங்குழலை இசைக்கும் பாவனையில் பிடித்த இரு முன்கரங்களுடனும் காட்சி தருகின்றார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர்.
உற்சவ மூர்த்தியான மதன கோபாலர் அழகே உருவாகக் காட்சி தருகிறார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
தாயார் மதன மதுரவல்லி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார்.
மகாமண்டபத்தில் ராமாயணம் தொடர்பான சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
முன்மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், சஞ்சீவி ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளை சேவிக்கலாம். பிரகார வலச்சுற்றில் கஜலட்சுமி, சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, ஆண்டாள் ஆகிய திருவுருவங்கள் அழகாகக் காட்சியளிக்கின்றன.
வெளிப்பிரகாரத்தில் காணப்படும் ஹரிஹர சர்ப்பராஜாவின் கற்சிலை அற்புதமாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிணைந்த இரண்டு பாம்புகளின் அழகிய வடிவ சிற்பம். முன்புறம் மேலிருந்து கீழாக பெருமாள், மகாலட்சுமி, பெரிய திருவடி, சிறிய திருவடி சிற்பங்களையும், பின்புறமாக மேலிருந்து கீழாக சிவலிங்கம், அம்பிகை, விநாயகர், முருகன் சிற்பங்களையும் செதுக்கியுள்ளனர். தோஷங்களை நீக்க வல்ல வரப்பிரசாதியாக உள்ளார் ஹரிஹர சர்ப்பராஜா.
அரசமரமும் அரசரடி விநாயகரும் பிரசித்தி பெற்றவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.