அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

God Name : சொக்கநாதர் எனப்படும் சுந்தரேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

இந்திரலோகத்தில் உல்லாசமான சூழலில் இருந்த இந்திரனின் சபைக்கு பிருகஸ்பதி வருகை தந்தார். அவர் வந்ததை கவனியாது அரம்பையரின் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரனை சபித்துவிட்டு சென்றார் பிருகஸ்பதி. இதனால் இந்திரனின் செல்வங்கள் அவனை விட்டு அகன்றன. பின்னர் இத்தலத்திலுள்ள கடம்பவனத்திற்கு வந்து, இங்கு சுயம்புவாக இருந்த லிங்கத்தை தரிசித்தான். வெய்யிலிலிருந்தும், மழையிலிருந்தும் லிங்கத்தை பாதுகாக்க, வானத்திலிருந்து பொன் விமானம் ஒன்றை வரவழைத்தான். தேவ தச்சன் மயன் உருவாக்கிய விமானம். பின்னர் பொற்றாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டான். பிரத்யட்சமான சிவபெருமானிடம் ஆசானை அவமதித்த ஆணவம் தொலையவும், பழி பாவம் தொலையவும் வேண்டினான். அவன் வழிபட்ட தினம் ஒரு சித்ரா பௌர்ணமி தினமாகும். பிறிதொரு சமயம், சிவபெருமான் சூடியிருந்த தாமரை மலர் ஒன்று கிடைக்கப் பெற்ற துர்வாச முனிவர், இந்திரனிடம் அதை பரிசாக தந்தார். அதை அலட்சியமாக வாங்கி, தனது ஐராவதத்தின் மத்தகத்தின் மீது வைத்தான் இந்திரன். மலரை துதிக்கையால் வாங்கி தனது காலில் போட்டு மிதித்தது ஐராவதம். தலைக்கனம் கொண்ட உன் தலை பாண்டியன் ஒருவன் நிலை குலையச் செய்வான் என்றும், பூவை மிதித்த உன் ஐராவதம், காட்டு யானையாக மாறி பூமியில் திரியட்டும் என்றும் சபித்துவிட்டார் துர்வாசர். பூலோகம் வந்து திரிந்து கொண்டிருந்த யானை, கடம்பவனம் வந்ததும் சுய நினைவு பெற்று, இந்திரன் விமானம் அமைத்து வழிபட்ட லிங்கத்தை தேடி கண்டுபிடித்து, பொற்றாமரைக்குளத்தில் மூழ்கி எழுந்து தாமரை மலர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபட்டது. பிரத்யட்சமான இறைவன் வேண்டுவது யாது? என வினவ விமானத்தை தாங்கும் எட்டு யானைகளுள், தானும் ஒரு யானையாக இருக்க அருளுமாறு வேண்டியது. முன்நாளில் கடம்ப வனமாக கிடந்த இவ்வூரில் தனஞ்சயன் என்ற வணிகன், தனது ஊருக்கு திரும்ப வந்து கொண்டு இருந்தபோது இருட்டி விட்டது. பயணக் களைப்பு நீங்க இங்கேயே படுத்துக் கொள்ள எண்ணினான். அப்போது, பொன் விமானம் ஒன்று ஜொலிப்பதையும் அதன் கீழ் சிவலிங்கம் ஒன்று இருப்பதையும் பார்க்கும் பாக்யம் அவனுக்கு கிட்டியது. பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பாக இந்திரன் நிர்மாணித்து வழிபட்ட இந்திர விமானமே, வணிகன் தனஞ்சயனின் கண்களுக்கு காட்சியாக கிடைத்தது. அஷ்ட கஜங்கள், முப்பத்தி இரண்டு சிங்கங்கள், அறுபத்திநாலு சிவகணங்கள் தாங்கி நிற்கும் பொன் வேய்ந்த விமானம். ஊருக்கு திரும்பியதும், தான் கண்ட காட்சிகளை மன்னர் குலசேகர பாண்டியனிடம் தெரிவித்தான் வணிகன் என ஸ்தல வரலாறு. வணிகன் தெரிவித்த விஷயங்களோடு உறங்கப்போன பாண்டியனின் கனவில், சித்தர் ஒருவர் தோன்றி அந்த இடத்தில் ஆலயம் எழுப்புமாறு பணித்தார். இவ்வூருக்கு நெருக்கம் ஏற்பட்டதால், விரிவுபடுத்த எண்ணி, இந்த நகரத்தின் ஆதி எல்லையை காட்டித் தருமாறு இறைவனை வேண்டினான் வம்மி சேகர பாண்டிய மன்னன். அவர் தன்னுடைய கங்கணமான பாம்பை எல்லையை அளக்க அனுப்பினார். அது வாயும் - வாலும் ஒன்றுபடும்படி வட்டமாக வளைந்து எல்லையைக் குறித்தது. பாம்பு ஒன்று வட்டமாக சுருண்டு வளைந்த தோற்றத்தில் இவ்வூரின் அமைப்பு உள்ளது. இதனால் இவ்வூருக்கு ஆலவாய் என்று பெயர். சமஸ்கிருதத்தில் ஹாலாஸ்ய என்பார்கள். நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்க தனது சடைமுடியின் பிறையிடத்திலுள்ள அமுதத்தை (மதுவை) தெளித்து நகரத்தை மதுரமாக்கினார். இதனால் இவ்வூர் மதுரை எனப் பெயர் கொண்டது. குலசேகர பாண்டியனின் மகனான மலையத்துவஜ பாண்டியன் - காஞ்சன மாலை தம்பதியினருக்கு குழந்தை பாக்யம் இல்லை. நீண்ட தவம் ஒன்றை மேற்கொண்டான் பாண்டியன். பராசக்தியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என பிரார்த்தித்தான். புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை செய்தான். அந்த வேள்வியில் மூன்று வயது பெண் குழந்தையாக பராசக்தி தோன்றினாள். மூன்று ஸ்தனங்களுடன் அதிசயப் பிறவியாக தோன்றியதால் கவலையுற்றான் மன்னன். பருவமெய்தி மணாளனைக் காணும்போது மூன்றாவது ஸ்தனம் மறையும் என அசரீரி வாக்கு கேட்டது. தடாதகை எனப் பெயர் சூட்டி வளர்த்தான். மலையத்துவனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள் தடாதகை. பல திக்விஜயங்களை செய்து அனைவரையும் வெற்றி கொண்டாள். கயிலையை முற்றுகையிட்டு, பூத கணங்களையும் அடக்கி சிவபெருமானை நோக்கி முன்னேறினாள். சிவபெருமானை எதிர் கொண்டதும் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைந்தது. தன்னை ஆளப் போகிறவர் இவர்தான் என உணர்ந்தாள். தடாதகை எனும் மீனாட்சியை சோமசுந்தரக் கடவுள் மணந்தார் என புராண வரலாறு. விபூதி, ருத்ராட்சம், சடைமுடி மூன்றையும் தரித்து சோமசுந்தரர் அரசாட்சி செய்தார் எனக் கூறுவர். சிவபெருமானே சோமசுந்தரராக ஆட்சி செய்ததால் இவ்வூர் சிவராஜதானி என்ற பெயரைக் கொண்டது. வருணன் இத்தலத்தை பேரலையால் தாக்கி அழிக்க முற்பட்டபோது, சிவபெருமான் சடையிலிருந்து விடுபட்ட நான்கு மேகங்களும் மலை போல உயர்ந்து, நான்கு மாடங்களாக கூடி நின்று மதுரையை காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் வந்தது, என ஸ்தல வரலாறு. கடம்ப வனம், சிவ நகரம், சமஷ்டி விச்சாபுரம், ஜீவன் முக்திபுரம் என்ற பெயர்களும் உண்டு. விக்ரம பாண்டியனின் மகன் இராசசேகர பாண்டியன், நாட்டிய பயிற்சியில் செய்ததற்கே எனக்கு கால் வலிக்கிறதே, சதா சர்வ காலமும் காலைத் தூக்கி ஆடிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும்? என எண்ணி, வெள்ளியம்பலத்திற்கு விரைந்து சென்றான். எப்போதும் ஒற்றைக் காலில் நிற்கும் உனக்கு கால் வலிக்குமே... காலை மாற்றிக் கொள் என வேண்டினான். நீ காலை மாற்றிக் கொள்ளாவிட்டால் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக் கூறி அதற்கான முயற்சியில் இறங்க, நடராஜப் பெருமான் காலை மாற்றி நடனம் ஆடினார் என ஸ்தல வரலாறு. சோமசுந்தரக் கடவுள் 64 திருவிளையாடல்களை செய்து அருளிய ஸ்தலம். கபிலர், பரணர், நக்கீரர் போன்ற புலவர்களாகிய சங்கத்தார் இருந்த ஸ்தலம். மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் என்னும் பெயருடன் மந்திரியாக இருந்த ஸ்தலம். கூன் பாண்டியனின் சுர நோயை மந்திரமாவது நீறு எனும் பதிகம் பாடி ஞானசம்பந்தப் பெருமான் தீர்த்தருளிய ஸ்தலம். தருமி எனும் ஏழை புலவனுக்காக வந்து தமிழை ஆராய்ந்த ஸ்தலம். நவகிரகங்களுள் புதனுக்குரிய ஸ்தலம். மீனாட்சி சந்நிதி மற்றும் சுந்தரேசர் சந்நிதி தவிர மற்றவைகள் அனைத்தும் 1310ல் மாலிக்காபூர் படையெடுப்பில் அழிந்து விட்டதாக குறிப்பொன்று கூறுகிறது. தற்போதைய கோவிலை குலசேகர பாண்டியன் நிர்மாணித்தான் எனக் கூறப்படுகிறது. விஜயநகரத்து விஸ்வநாத நாயக்கின் தலைமைப் பொறியாளரான அரியநாத முதலியார் அவர்களால் ஆயிரங்கால் மண்டபமும் மற்ற மண்டபங்களும் கட்டப்பட்டனவாம். திருமலை நாயக்க மன்னன், தற்போதைய கோவில் எழும்ப, நிறைய இறை பணிகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவிலுக்குள் போகும் முறை: (கோவிலின் வரைபடம் கோவில் அலுவலக கவுண்டரில் கிடைக்கும்) வேட மண்டபம் - கிழக்கு கோபுரம் - அஷ்ட சக்தி மண்டபம் - மீனாட்சி நாயக்கர் மண்டபம் - சித்திர கோபுரம் - முதலிப்பிள்ளை மண்டபம் - பொற்றாமரைக்குளம் - ஊஞ்சல் மண்டபம் - மீனாட்சி அம்மன் சந்நிதி - நடுக்கட்டு கோபுரம் - இடைக்கட்டு கோபுரம் - முக்குறுணிப் பிள்ளையார் - சங்கத்தார் கோவில் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி - கம்பத்தடி மண்டபம் - கோபுர நாயக கோபுரம் - வசந்தராயர் மண்டபம் - சேர்வைக்கார மண்டபம் - கல்யாண மண்டபம். தங்கத்தகடு வேய்ந்த திரிதள விமானம் கொண்ட மூலஸ்தானத்தில் அம்பிகை மீனாட்சி சாந்த ஸ்வரூபியாக நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். மரகதக்கல்லில் உருவாக்கப்பட்ட கரும்பச்சை நிற அழகிய திருமேனி. வலது கரத்தில் மலரை ஏந்தியும், இடது கரத்தை தொங்கவிட்டும் (லோல ஹஸ்தம்) வலது தோளில் கிளி ஒன்றை தாங்கியும் திவ்ய தரிசனம் தருகிறாள். தடாதகை, மரகதவல்லி, கயற்கண் குமரி, மதுராபுரித் தலைவி என இவளுக்கு இருக்கும் அநேக பெயர்களில் அங்கயற்கண்ணி என்ற பெயரே விசேஷமானது. கோஷ்டத்தில் இச்சாசக்தி - ஞானசக்தி - கிரியாசக்தி ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். ஷோடச கௌரிகளில் சாம்ராஜ்ய மஹாகௌரி எனப் போற்றப்படுபவள். சக்தி பீடங்களுள் மனோன்மணி பீடமாகப் போற்றப்படுகிறது. ராஜமாதங்கி சியாமளா சக்தி பீடம். அஷ்ட சக்தி மண்டபத்து தூண்களில் - யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி, கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகிய அஷ்ட சக்திகளின் திருவுருவங்களை கண்டு களிக்கலாம். அடுத்து மீனாட்சி நாயக்கர் மண்டபம். 1008 விளக்குகள் உள்ள திருவாச்சி இருக்கிறது. விழாக் காலங்களில் எரிய விடுவார்கள். முதலிப்பிள்ளை மண்டபத்து தூண்களில் காணப்படும் தாருகாவனத்து ரிஷிகள், ரிஷிபத்னிகள், மோகினி மற்றும் பிட்சாடனர் திருவுருவங்களை அவசியம் பார்க்க வேண்டும். தெற்கு பிரகார மேற்கு மூலையில் விபூதிப் பிள்ளையார் தரிசனம் தருகிறார். பக்தர்களே விபூதியைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். அதி அற்புதமான சிற்பங்களை கொண்ட சித்திர கோபுரத்தின் முழு அழகையும் பொற்றாமரைக்குளத்தின் மேற்கு கரையிலிருந்து கண்டு மகிழலாம். குளத்தின் மேற்கு சுற்றுப் பகுதியில் ஊஞ்சல் மண்டபத்தைக் காணலாம். வெள்ளிக்கிழமை நாட்களில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருவுருவங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள். பொற்றாமரைக்குளத்தில் தங்க தாமரை உள்ளது. சிவபெருமான் தனது சூலத்தை பூமியில் ஊன்றி உண்டாக்கியது. தேவேந்திரனும் அவனது யானையும் சாப விமோசனம் பெற்ற இடம். சங்க பலகை மிதந்த இடம். நெற்றிக்கண் தீப்பொறிகளின் வெப்பம் தாங்காத நக்கீரனுக்கு மறு வாழ்வு கிடைத்த இடம். குளத்தின் கிழக்கு கரையில் நின்று பார்த்தால் ஸ்வாமி மற்றும் அம்பாளின் தங்க விமானங்களை தரிசிக்கலாம். இடைக்கட்டு கோபுரத்தைக் கடந்தால் முக்குறுணிப் பிள்ளையாரை தரிசிக்கலாம். எட்டடி உயரம் கொண்ட ஆஜானுபாகுவான திருமேனி. முக்குறுணி அளவு என்பது 18 படி ஆகும். பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை மாவாக்கி அதைக் கொண்டு ஒரே ஒரு கொழுக்கட்டை செய்து நைவைத்யம் செய்வார்கள். மேற்கு சுற்றிலுள்ள பலகை கோபுரத்தைக் கடந்தால் சங்கத்தார் கோவிலை அடையலாம். சங்கப் புலவர்கள் 48 பேர் மற்றும் 49வதாக சோமசுந்தரரும் அமர்ந்து தமிழ் ஆராய்ச்சி செய்த இடம். புலவர்களின் திருவுருவச் சிலைகளைக் காணலாம். சற்றுத் தள்ளி காளத்தீஸ்வரர், ஆதி பராசக்தி, கரிய மாணிக்கப் பெருமாள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சண்டன் - பிரசண்டன் எனும் துவார பாலகர்களைக் கடந்து, அனுக்ஞை விநாயகரிடம் ஆசி பெற்று தண்டபாணி மற்றும் கழுகுமலை குமரனை தரிசித்து சோமசுந்தரக் கடவுள் சந்நிதியை அடையலாம். மஹா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய சந்நிதி. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக் கல்யான சிற்பம் - கண்களையும் மனதையும் விட்டகலாத எழில் சிற்பமாக விளங்குகிறது. ஐராவதா, புண்டரீகா, வாமனா, குமுதா, அஞ்சனா, புஷ்பதந்தா, சர்வபௌமா, சுப்ரதீபா ஆகிய அஷ்ட கஜங்கள் (எட்டு) சுந்தரேஸ்வரர் சந்நிதியை தாங்கியுள்ளன. அஷ்ட கஜங்கள், முப்பத்திரண்டு சிங்கங்கள், அறுபத்திநாலு சிவகணங்கள் தாங்கி நிற்கும் பொன் வேய்ந்த விமானம். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் சொக்கநாதர். சுயம்பு லிங்கம். தேஜோ மயமாக ஒளி வீசும் அழகிய திருமேனியை உடையவர். நெற்றியில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு மணி, கற்பூர ஆரத்தியில் மூன்றாவது கண்ணாக ஜொலிக்கிறது. இவருக்கு சுந்தரேஸ்வரர், மீனாட்சி சுந்தரர், சோமசுந்தரர், கல்யாண சுந்தரர், ஷெண்பக சுந்தரர், சொக்கலிங்கம், கடம்பவனேஸ்வரர், இறையனார், மருதேஸ்வரர், அடியார்க்கு நல்லான் என அநேக திருநாமங்கள் உண்டு. சொக்கர் என்றால் அழகியவர் எனப் பொருள். ஸ்வாமி சந்நிதிக்கு எதிரே நந்தியம் பெருமான் ஒரு தொட்டிக்குள் எழுந்தருளியுள்ளார். மழை பெய்வது பொய்த்துப் போனால், பக்தர்கள் தொட்டிக்குள் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி, பிரார்த்தனை செய்வார்களாம். இதை மழை பூஜை என்பார்கள். கம்பத்தடி மண்டபத்தில் பத்ரகாளி வீரபத்ரர் ஆகியோரை பிரம்மாண்டமான தோற்றத்தில் காணலாம். அதையடுத்து உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை சிற்பங்களின் கலைக்கூடம் எனலாம். பலவிதமான ஒலிகளைத் தரும் தூண்கள் இடம் பெற்றுள்ளன. அருகே காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம். நடராஜரின் ஐந்து சபைகளில் மூன்றாவது என்ற சிறப்பைக் கொண்டது வெள்ளியம்பலம். இதனை ரஜதசபை என்பார்கள். இங்கு பெருமான் ஆடுவது சந்தியா தாண்டவம். வலது கரத்தில் கஜஹஸ்த முத்திரை பிடித்து ஆடுகின்றார். வரகுண பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க கால் மாறி நடனமாடிய ஸ்தலம். வெள்ளியம்பத்தின் மாணிக்க மேடையில் சிவகணங்கள் மொந்தை எனும் சிறிய மத்தளம் கொண்டு முழக்கம் செய்ய, நந்தியம்பெருமான் மா மழுவு கொண்டு தாக்க, நாரணன் இடக்கை எனும் முழவினை ஆர்க்க, தும்புரு - நாரதர் இசைந்து பாட, துந்துபிகள் ஒலிக்க, கலைமகள் ஸ்ருதி கூட்ட, பிரம்மன் யாழிசைக்க, முயலகன் மீது வலது காலை மிதித்துக் கொண்டு, இடது காலை மேலே தூக்கி, நடனமாடும் அழகைக் காண கண் கோடி வேண்டும். குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும், பனித்த சடையும், பவளம் போல் மேனியும், எடுத்த பொற் பாதமும் உடைய நடராஜப் பெருமானின் திருக்கூத்து நடந்த இடம். பதஞ்சலியும் - வியாக்ரபாதரும் இத்திருக்கூத்தில் லயித்து, தாம் அனுபவித்த பரமானந்தத்தை அனைவரும் காணும்படியாக இங்கேயே எழுந்தருளுமாறு பிரார்த்தித்தனர். அதே கோலத்தில் காட்சி தந்த இறைவன், பின்னர் பாண்டியனுக்காக கால்மாறி ஆடிய நிலை கொண்டார். ஸ்வாமி கோவிலின் வாயு திசையில் உள்ள சந்நிதியில் எல்லாம் வல்ல சித்தர் வீராசனத்தில் அமர்ந்து தரிசனம் தருகின்றார். 18 சித்தர் பீடங்களில் சுந்தரானந்த சித்தர் பீடம் எனக் கூறுவர். தலையைப் பின்னி அலங்கரித்து எடுத்துக் கட்டிய முடியுடன் உற்சவ மூர்த்தி கையில் கரும்பு ஒன்றை வைத்துக் கொண்டு தரிசனம் தருகின்றார். கல் யானை கரும்பு சுவைக்கும் காட்சி சிற்பமாக இடம் பெற்றுள்ளது. வெள்ளியால் உருவான சந்திரசேகரரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. தேவாரத்திருத்தலம் - சக்தி பீடங்களில் ஒன்று - பஞ்ச சபைகளில் ஒன்று
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.