அருள்மிகு நச்சாடை தவிர்த்தார் திருக்கோவில் (தேவதானம்)
God Name : நச்சாடை தவிர்த்த நாயகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கோவை
Call : +91-
சிவதரிசனம் செய்வதல்லாது வேறு சிந்தனையின்றி வாழ்ந்த இப்பகுதி மன்னனுக்கு அவனது எதிரி ஒருவன், நச்சு கலந்த ஆடை ஒன்றை தயாரித்து தூதுவன் மூலமாக அனுப்பி வைத்தான். இவ்விஷயத்தை மன்னனின் கனவில் தோன்றி கூறி எச்சரித்தார் இறைவன். தூதுவன் கொண்டு வந்த நச்சாடையை தூதுவனுக்கே போர்த்தி விடுகிறான் மன்னன். தூதுவனின் உடல் வெந்து போகிறது. தன்னைக் காப்பாற்றிய இறைவனுக்கு நச்சாடை தவிர்த்த நாயகர் எனப் பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான் மன்னன் என ஸ்தல வரலாறு.
மூலவர்: நச்சாடை தவிர்த்த நாயகர், அம்பாள்: தவம் பெற்ற நாயகி.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள நச்சாடை தவிர்த்த நாயகர் மிகுந்த வரப்பிரசாதி. ஆவுடையார் மட்டுமே கருவறையில் இருப்பது, இறைவன் எல்லையற்று வியாபித்திருப்பவன் என்பதை உணர்த்துகிறது.
அம்பாள் தவம் பெற்ற நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பஞ்ச பூத ஸ்தலங்களுள் இது ஆகாய ஸ்தலமாக கருதப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.