அருள்மிகு வைத்யநாதஸ்வாமி திருக்கோவில் (மடவார் விளாகம்)
God Name : வைத்யநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கோவை
Call : +91-
தனது அகந்தை மறைய வேண்டி இங்கு தவமிருந்தார் துர்வாசர். வன்னி மரத்தடியில் ஆயிரம் இதழ் தாமரையில் பிரத்யட்சமானார் வைத்யநாதர். மனோன்மணி அம்மை இத்தலத்தில் விரதம் பூண்டு வைத்யநாதரை வழிபட்டு அருள் பெற்றதாக ஸ்தல வரலாறு.
நாகநம்பி எனும் சிவனடியார் இவ்விறைவனை சிரத்தையாக வழிபட்டு வந்தார். அடியாரின் வறுமையைப் போக்க எண்ணிய இறைவன் அனுதினமும் ஒரு பொற்காசைப் படியில் வைத்தருளினார். இதனால் படிக்காசுநாதர் என்ற பெயரைக் கொண்டார்.
வணிகன் ஒருவன் அடியவரின் பொற்காசைப் பெற்றுக் கொண்டு சொற்ப பொருள்களையே கொடுத்து ஏமாற்றி வந்தான். வணிகனுக்கு புத்தி புகட்ட எண்ணிய இறைவன் ஒரு திருவிளையாடலை நடத்தினார்.
வணிகன் வேடத்தில் வந்து இறைவன், வெறும் கற்களை மாணிக்கக் கற்களாக மாற்றி, அடியவரை ஏமாற்றிய வணிகனிடம் விற்றார். வேடதாரி சென்றதும் மாணிக்கங்கள் வெறும் கற்களாக மாறின. அவனது தவறை உணரச் செய்தார்.
இவ்வூர் வழியாக மிளகு மூட்டைகளை ஏற்றி வந்த வியாபாரி ஒருவர், சுங்கவரி செலுத்த மனமில்லாமல், வெறும் உளுந்து எனக் கூறி அதிகாரிகளை ஏமாற்றினார். சந்தைக்குப் போய் பிரித்துப் பார்த்தால் அவ்வளவும் உளுந்தாக மாறி இருந்ததாம். புதுவை நாயகரை பணிந்த வியாபாரி தன் தவறை திருத்திக் கொள்வதாக பிரார்த்தித்தார்.
இக்கோவிலில் பணி புரிந்து விபூதி பெற்றுக் கொண்டு போய் மூட்டையில் தெளித்ததும் மீண்டும் மிளகாக மாறியது.
பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு போய்க் கொண்டிருந்த ஏழை பெண் ஒருத்தி வழியில் வலியெடுத்து தவிக்க, இறைவனே அவளது தாய் ரூபமாக வந்து பிரசவம் பார்த்ததாக கூறுவர்.
மூலவர்: வைத்யநாதர்் அம்பாள்: சிவகாமி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான வைத்யநாதஸ்வாமி. சுயம்பு லிங்கம்.
புரட்டாசி, பங்குனி மாதங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படர்ந்து சூரிய பூஜை செய்து வழிபடுகின்றன.
வன்னி மரத்தடியில் சுயம்புவாக தோன்றியதால் வன்னிநாதர், புதுவை நாயகர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.
திருக்கற்றளீஸ்வர உடைய நாயனார் என்று கல்வெட்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன. படிக்காசு வைத்தருளிய நாதர் என்ற திருநாமமும் உண்டு.
மூலவரின் கொடி மண்டபத்தின் மேல் புதுவை நாயகரின் இருபத்திநான்கு திருவிளையாடல்களை ஓவியங்களாக தீட்டி வைத்துள்ளனர்.
சுவாமி சந்நிதியின் துவாரபாலகராக ஜ்வரதேவர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ காளர் என எழுதி வைத்துள்ளனர்.
வால்மிளகை பசும்பால் விட்டு அரைத்து இவருக்கு பற்று போட்டால் கடுமையான ஜ்வரம் கூட நீங்கிவிடும் என அர்ச்சகர் தெரிவித்தார்.
நந்தி தேவருக்கு அனுதினமும் ம்ருத்யுஞ்சய ஜபம் நடத்துகின்றனர்.
வைத்யநாத சுவாமி சந்நிதியின் இடது பக்கம் மனோன்மணி அம்மை எழுந்தருளி உள்ளார். 11 வயது சிறுமியின் தோற்றம். இவளை வாலை பூஜை செய்து தரிசிக்கின்றனர். மனோன்மணி அம்மைக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத்தடை விலகும் என்பார்கள்.
வைத்யநாத சுவாமி சந்நிதியின் வலது பக்கம் அம்பாள் சிவகாமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். செண்பகக்குழலி என்ற பெயரும் உண்டு. சிவகாமி சந்நிதியின் எதிரே கொடிமர மண்டபத்து விதானத்தில் ஸ்ரீசக்கரம் இருக்கின்றது.
அமாவாசையும் குரு ஹோரையும் சேர்ந்த வேளையில் ஸ்ரீ சக்கரமருகே அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வந்தால் வாலை தரிசனம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
சுவாமி - அம்பாள் சந்நிதிகளுக்கிடையே உள்ள தங்கமுலாம் பூசிய சப்பரத்தில் உற்சவரான வைத்யநாதரும் அம்பாள் சிவகாமியும் காட்சி தருகின்றனர். உற்சவ விக்ரகங்கள் மிகவும் அழகானவை.
சிறப்பான வேலைப்பாடுகளையுடைய அம்பலவாணர் மண்டபத்தில், ஒரே கல்லில் - உச்சி வளைவும், அடியில் முயலகனும் கொண்ட நடராஜ மூர்த்தி ஓர் அரிய படைப்பு. ஆறடி உயர அழகிய திருமேனி.
கங்காளநாதர், சந்திரசேகர், அனுக்ஞை பிள்ளையார், அஸ்திரத்தேவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இங்குள்ள கால பைரவரை வழிபடுபவர்களுக்கு ஏழரை சனியின் கஷ்டங்கள் இராது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.