நல்லத்தம்பியும், நல்ல தங்காளும் ராமலிங்க ராஜாவின் குழந்தைகள். சீரும் சிறப்புமாக வளர்ந்தனர். நல்லதங்காளுக்கு பால்ய விவாகம் செய்து வைத்தனர். மானாமதுரையின் இளவரசரான காசிலிங்கதுரை என்பவர் கணவரானார். ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் நல்ல தங்காள். நல்லதம்பியின் மனைவி மூழி அலங்காரி என்பவள், நல்லதங்காளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் பல கொடுமைகளை செய்து துன்புறுத்திவந்தாள். சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த நல்லதங்காள் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடத் தீர்மானித்தாள். தான் கட்டியிருந்த பச்சை புடவைத் தலைப்பைக் கிழித்து வழி நெடுக போட்டுக் கொண்டே போனாள். நெடுந்தூரம் சென்றதும் தான் கண்ட பத்ரகாளி கோவிலினருகே இருந்த பாழுங்கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாகப் போட்டுவிட்டு தானும் குதித்து உயிரைப் போக்கிக் கொண்டாள். தனது சகோதரியைக் காணாததால் தவித்துப் போன நல்லதம்பி, தன் மனைவி செய்த கொடுமைகளை கேட்டறிந்து, அவர்களை தேடி அலைந்தான். வழி நெடுக காணப்பட்ட துணி சிதறல்களை அடையாளம் தெரிந்து கொண்டு சென்று பார்த்ததில், பாழுங்கிணற்றுக்குள் சடலங்கள் இருப்பதை கண்ணுற்றான். பத்ரகாளி முன்பாக எட்டு சடலங்களையும் கிடத்தி நீதி கேட்டான். காளியின் அருளால் நல்ல தங்காளும் அவளது குழந்தைகளும் காளியிடமே இடம் பெற்று தெய்வமானார்கள். திரும்ப சென்று தனது மனைவி மூழி அலங்காரியையும் அவளது குடும்பத்தினரையும் பழி தீர்த்த நல்லதம்பி, திரும்ப வந்து அய்யனாருடன் ஐக்யமானான் என வரலாறு.
பிரதான கருவறையில் காளிக்குள் காளியாகி நின்ற நல்லதங்காளும், பத்ரகாளியும் ஒரே உருவமாக காட்சி தருகின்றனர். கோவிலுக்கு வெளியே உள்ள சந்நிதியில் நல்லதங்காளின் ஏழு குழந்தைகளும் தெய்வமாக உள்ளனர். ஒவ்வொரு குழந்தையாக தூக்கிப் போட்ட நல்ல தங்காள் தன்னையும் மாய்த்துக் கொண்ட பாழுங்கிணறு சற்று தொலைவில் உள்ளது. நல்லதம்பி கோவிலில் ஐயனாருடன் ஐக்யமான நல்லதம்பி ஒரே திருவுருவமாக காட்சி தருகின்றார். கோவிலுக்கு வெளியே நல்லதம்பியின் பெற்றோர்கள், காசிலிங்கத்துரை, பெரிய கருப்பர், சின்னக் கருப்பர், பேச்சி ராக்காச்சி ஆகிய பரிவார தேவதைகள் காணப்படுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.