அருள்மிகு காட்டழகர் திருக்கோவில் (செண்பகத்தோப்பு)
God Name : காட்டழகர் எனப்படும் சுந்தரராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
கோவை
Call : +91-
மலைத்தொடரின் நடுவேயுள்ள பள்ளத்தாக்கின் உச்சிக் குன்றில் அமைந்துள்ள கோவில். இது மண்டூக மலை என்றும் அழைக்கப்படுகிறது. செண்பகத்தோப்பு வரை வாகனத்தில் செல்லலாம். அதன்பின் மலைப்பாதையில் 5 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். 247 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இயற்கை காட்சிகள் நிறைந்த வழிப்பாதை.
மூலஸ்தானத்தில் மூலவராக காட்டழகர் எனப்படும் சுந்தரராஜப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பெயருக்கேற்ப அழகான திருமேனி. ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பதினெட்டாம்படி கருப்புசாமி, யமன், காலன், தூதன் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
திருமாலிருஞ்சோலை கள்ளழகரே இங்கு காட்டழகராக எழுந்தருளியுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பிரம்மோத்ஸவத்தின் பஞ்ச கருட சேவையில் எழுந்தருளுவார். இங்குள்ள தீர்த்தத் தொட்டியில் நீர்வீழ்ச்சி வீழ்கிறது. இதுவே அழகர் தீர்த்தம் எனப்படும் புனித நீர். இது நூபுர கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
வனவிலங்குகள் நிறைந்த பிரதேசமாக இருப்பதால், பக்தர்கள் சென்று சேவித்துவிட்டு உடனடியாகத் திரும்பிவிடுவார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.