அருள்மிகு புழுங்கல்வாரிப் பிள்ளையார் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

God Name : புழுங்கல்வாரிப் பிள்ளையார்

திருக்கழுக்குன்றம் கோவில்

கோவை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள பிள்ளையார் மிகுந்த வரப்பிரசாதி. அகரம், உகரம், மகரம், பிந்து, நாதம் என ஐந்து அட்சரங்களைக் கொண்டு ஓங்கார ஸ்வரூபியாக, தேஜோமயமான அழகிய திருமேனியுடன் காட்சி தருகின்றார். மார்கழி மாத முதல் ஐந்து நாட்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் இவரது மேனி மீது படர்ந்து சிறப்பு பூஜை செய்கின்றன. புழுங்கல் அரிசி சாதத்தை நைவேத்தியம் செய்கின்றனர். இதனால் புழுங்கல்வாரிப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டார். நைவேத்தியம் செய்ய அரிசி கிடைக்காத நாட்களில் அர்ச்சகர் மனம் வருந்துவார். அவருக்கு உதவ வேண்டி, பிள்ளையாரே தினமும் இரண்டு மரக்கால் அரிசியை தனது சிலையின் பின்னால் வைத்து தந்தருளுவார். அர்ச்சகரிடம் மட்டும் எப்போதும் அரிசி இருப்பதால், அவர் மீது சந்தேகம் கொண்டவர்கள், அவரை கல்மண்டபத் தூண் ஒன்றில் கட்டிப்போட்டு அடித்தனர். அன்றிரவே ஊர் முக்கியஸ்தர்களின் கனவில் தோன்றிய பிள்ளையார், அர்ச்சகருக்கு தாமே நெல் கொடுத்து வருவதாகத் தெரியப்படுத்தினார். இதனால் அர்ச்சகர் விடுதலை செய்யப்பட்டார் என ஸ்தல வரலாறு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.